
தமிழகத்தில் முழுவதும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச் செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அரசு அறிவித்தது.
இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாமல் இருந்தால் அவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்பதை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத் துறை இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அந்த சுற்றறிக்கையில், காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத மாணவர்களின் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து விடைத்தாள் ஒப்படைப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த விவரங்கள் தனியாக பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment