115 நாட்கள் லாக்டவுனிற்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - படிப்படியாக தொடங்கப்படும் வகுப்புகள்!115 Days After Lockdown Schools Opening Today - Gradually Starting Classes! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 5, 2020

115 நாட்கள் லாக்டவுனிற்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - படிப்படியாக தொடங்கப்படும் வகுப்புகள்!115 Days After Lockdown Schools Opening Today - Gradually Starting Classes!

115 நாட்கள் லாக்டவுனிற்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - படிப்படியாக தொடங்கப்படும் வகுப்புகள்!115 Days After Lockdown Schools Opening Today - Gradually Starting Classes!

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஒட்டி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சுமார் மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு, வைரஸ் தொற்று கட்டுக்குள் இருந்ததை அடுத்து தளர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி மாணவர், பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளிகள் உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊரடங்கு

"இலங்கையில் ஊரடங்கு"
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதையொட்டி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக பள்ளிகள் மூடப்பட்டன.

115 நாட்கள் நீடித்த ஊரடங்கு

நாட்கள் நீடித்த ஊரடங்கு"
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் தளர்த்தப்பட்டதால் இன்று முதல் பள்ளிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 115 நாட்கள் ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள கல்வித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகரா, முதல்கட்டமாக கிரேடு 5, 11 மற்றும் 13 ஆகியவற்றிற்கு இன்று முதல் பள்ளிகள் இயங்கும்.

பள்ளிகள் இன்று திறப்பு

"பள்ளிகள் இன்று திறப்பு"
இதில் கிரேடு 13ல் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கூடுதல் நேரத்துடன் இயங்கும். வழக்கமாக 1.30 மணியுடன் பள்ளி நேரம் முடிவடையும் நிலையில் இனி 3.30 மணி வரை செயல்படும். அடுத்தக்கட்டமாக கிரேடு 12 மற்றும் 10 ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் கிரேடுகள் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆகிய வகுப்பினருக்கு ஜூலை 27ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும்.

சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்

சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்"
இறுதிக் கட்டமாக கிரேடு 1 மற்றும் 2 ஆகிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், ப்ளூ போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கோவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பள்ளிகளில் தீவிர ஏற்பாடுகள்

"பள்ளிகளில் தீவிர ஏற்பாடுகள்"
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தவோ அல்லது கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் அனைவரும் கடந்த வாரமே பணிக்கு திரும்பிவிட்டனர். இதையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், மாணவர்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல்" இதற்கு தயாராகும் வேலைகளில் ஈடுபட்டனர். இலங்கையில் முதல் கொரோனா தொற்று பதிவானதை அடுத்து மார்ச் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இலங்கையில் தற்போது வரை மொத்தம் 2,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு சமூகத் தொற்றாக எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதையடுத்து தீவிர ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் தொடர்ந்து இருமுறை தள்ளி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Post Top Ad