12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு..!.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு..!
 காலக்கட்டமாக இருப்பதால் பள்ளிகள்,கல்லூரிகள் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் மத்திய அரசு கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 27 ஆம் தேர்வு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்தார்.கடந்த மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு அவர்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது :பிளாஸ் 2 மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம எனவும், வரும் 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் மாணவர்களுக்குத் தேர்வு மையங்கள் அமைக்கபடாது எனவும்,

மாணவர்கள் செல்லும் தேர்வு மையங்களுக்கு ஏற்ப போதுமான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் எனவும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளது.இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3103887

Code