12-ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வை எழுதவில்லை எனில் தேர்ச்சி இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதாத விடுபட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கோபி அடுத்த கொளப்பலூரில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் கட்டடத்திற்கான பணியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுபட்ட 12-ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றும் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் எனவும் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் எனவும் பாடங்களை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.