வெறும் ரூ.365 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி; தினமும் 2ஜிபி டேட்டா; மிரட்டும் BSNL!365 days validity for just Rs. 2GB of data daily; Intimidating BSNL! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 5, 2020

வெறும் ரூ.365 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி; தினமும் 2ஜிபி டேட்டா; மிரட்டும் BSNL!365 days validity for just Rs. 2GB of data daily; Intimidating BSNL!

வெறும் ரூ.365 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி; தினமும் 2ஜிபி டேட்டா; மிரட்டும் BSNL!365 days validity for just Rs. 2GB of data daily; Intimidating BSNL!
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் பற்றிய முழு விவரங்கள் இதோ.

BSNL Rs.365 Plan Details
பி.எஸ்.என்.எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனம் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத் தொடர்பு வட்டங்களில் ரூ.365 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள். இந்த ரீசார்ஜ் காம்போ திட்டமானது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி தினசரி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பல இலவசங்களுடன் வருகிறது. எவ்வாறாயினும், இந்த இலவசங்கள் ரீசார்ஜ் செய்யப்பட்ட 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ.365 ரீசார்ஜ் திட்டமானது, நிறுவனத்தின் கேரள இணையதளத்தில் நேரலையில் உள்ளது. இருப்பினும் இது சென்னை - தமிழ்நாட, ஆந்திரா, அசாம், பீகார்-ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா- மேற்கு வங்கம், வடகிழக்கு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் - சத்தீஸ்கர் , ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி.-கிழக்கு, மற்றும் உ.பி.-மேற்கு போன்ற வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது.

முன்னரே குறிப்பிட்டபப்டி இது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் (மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட உள்ளூர் / எஸ்.டி.டி / தேசிய ரோமிங்) வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவச குரல் அழைப்பு வரம்பை அடைந்த பிறகு, அடிப்படை திட்ட கட்டணத்தின்படி கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

மேலும் ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை வரம்பற்ற அதிவேக டேட்டா நன்மையையும் இந்த திட்டம் பட்டியலிடுள்ளது, கூறப்பட்டுள்ள டேட்டா உச்சவரம்பு வரம்பை அடைந்த பிறகு, இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும், மற்றும் இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையையும் தொகுக்கிறது.

இலவச PRBT நன்மையானது CtopUp மற்றும் ஆன்லைன் ரீசார்ஜ்களில் மட்டுமே வழங்கப்படுகிறது, அதாவது SMS அல்லது USSD வழியாக ரீசார்ஜ் செய்யும் போது அணுக கிடைக்காது என்று அர்த்தம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த இலவசங்களின் செல்லுபடியாகும் தன்மை 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் ஆனால் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். 60 நாட்கள் செல்லுபடியாகும் இலவசங்கள் முடிந்த பிறகு, சந்தாதாரர்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளை தொடர்ந்து பயன்படுத்த வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

முன்னதாக பிஎஸ்என்எல் 600 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதும் உடன் ரூ.149 மற்றும் ரூ.725, வசந்தம் கோல்ட் ரூ.96 மற்றும் ரூ.74, ரூ.75 ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதான அப்டேட்களையம் அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் அதன் ரூ.149 மற்றும் ரூ.725 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களானது இனிமேல் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் அணுக கிடைக்காது என்றும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.96 வசந்தம் திட்டத்தை நிறுத்திக்கொண்டது மற்றும் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களை புதிய திட்டத்திற்கு மாறுமாறும் கேட்டுக் கொள்கிறது.

கடைசியாக பிஎஸ்என்எல் ரூ.74 மற்றும் ரூ.75 மதிப்புள்ள இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதும் திருத்தத்தை நிகழ்த்தியுள்ளது. ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டமானது அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தவிர மற்ற எல்லா வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

இந்த புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளை 250 நிமிடங்களின் என்கிற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (எஃப்யூபி) கீழ் வழங்குகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இதன் செல்லுபடியாகும் காலம் 600 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்களுக்கான (பிஆர்பிடி) அணுகலும் உள்ளது, ஆனால் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து முதல் 60 நாட்களுக்கு மட்டுமே.

புதிய ரூ.2,399 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த விதமான டேட்டா நன்மைகளும் கிடையாது. இதன் பொருள் இந்த புதிய திட்டம் வாய்ஸ் கால் ஆதரவை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Top Ad