விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து.!

விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து.!
வேலூர் விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால, பள்ளி கல்லூரி தேர்வுகள் ரத்து செய்தும், ஒத்திகைக்கப்படும் வருகிறது. இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் படிப்பதற்க்கு மாணவர்கள் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், மாணவர்கள் பிளஸ் 2 பாடத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜே.இ.இ தேர்வு மூலம் பெற்ற மதிப்பெண்களை மாணவர்கள் விஐடி பல்கலைக்கழக https://vit.ac.in/இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜே.இ.இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive