
கோவை; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு கல்லுாரி பேராசிரியை, 'யு டியூப்' சேனலில் பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளார்.ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தாவரவியல் துறை பேராசிரியை தீபா. இவர், அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில், பல தலைப்புகளில் பாடங்களை வீடியோ பதிவு செய்து, யு டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார். பேராசிரியை தீபா கூறியதாவது:ஊரடங்கு துவங்கிய நேரத்தில், என் கல்லுாரி மாணவர்களுக்கு தினமும் ஒரு பாடத்தை, 'வீடியோ' பதிவு செய்து, 'வாட்ஸ் ஆப்' குழுவில் அனுப்பி வந்தேன்.
பதிவேற்றம்மாணவர்கள் இந்த வீடியோவை, பிற மாணவர்களுக்கும் அனுப்பினர். பலரும், வீடியோ பாடங்கள் உபயோகமாக இருப்பதாக கூறினர்.இதையடுத்து, தனியாக யு டியூப் சேனல் துவங்கி, உயிரியல், தாவரவியல் மட்டுமின்றி அனைத்து அறிவி யல் பாடங்கள் குறித்தும், வீடியோ பதிவேற்றம் செய்கிறேன்.கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, நீட், சி.எஸ்.ஐ.ஆர்., தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இலவசமாக வீடியோ பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கட்டணம் இல்லைகட்டணம் செலுத்தி, பயிற்சிக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு, இலவசமாக பாடம் சொல்லி கொடுக்கும் நோக்கில் செய்து வருகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரது வீடியோ பாடங்களை பார்க்க, http://m.youtube.com/ channel/UCXqGIEjNmKrTm WVqMIngbDA அல்லது டாக்டர் தீபா பார்த்தசாரதி என்ற யு டியூப்பில் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment