சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 5, 2020

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார்.
உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளன.
உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும். தொழில்நுட்ப சமுதாயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'', என்று பிரதமர் கூறினார்.

Post Top Ad