சீருடை பணியாளர் தேர்வுக்கு பயிற்சி படித்த இளைஞர்கள் பயன்பெற அறிவுரை
சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரியில் படித்த இளைஞர்களுக்கு, மாவட்ட எஸ்.பி., அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.ஊட்டி, குன்னுார், கூடலுார், மசினகுடி, கப்பாலா, கொளப்பள்ளி போன்ற இடங்களில் சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பு இணையதள முகவரி www.tnvelaivaaippu.tn.gov.in பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும், நீலகிரி காவல்துறையின் முகநுால் பக்கத்தில் ஆன்லைன் கிளாஸ் என்ற தலைப்பில் வெளியாகும் காணொளிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'வாட்ஸ்-ஆப்' குழுவில் இணைய 8608000100 என்ற எண்ணிற்கு தங்களது விபரத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.