ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சி : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 8, 2020

ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சி :

ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சி :
ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சி
கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிக்கூடங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன், கணினி, லேப்டாப் போன்றவை இல்லாத சூழலாலும், நெட்வொர்க் பிரச்சினை காரணமாகவும் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று புதிய நடைமுறையை கையில் எடுத்துள்ளது. அங்குள்ள டும்கா மாவட்டத்தில் உள்ள பங்கதி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

அதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 246 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் 204 பேர் வீட்டில் ஸ்மார்ட்போன் இல்லை. கணினி, லேப்டாப் போன்ற வசதிகளும் இல்லை. பள்ளியின் தலைமை ஆசிரியரான ஷியாம் கிஷோர் சிங் காந்தி, வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு எப்படியாவது பாடம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். தீவிர யோசனைக்கு பிறகு ஒலிப்பெருக்கியை தகவல் தொடர்பு சாதனமாக மாற்றிவிட்டார். பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்திருக்கும் மரங் கள், தெருக்கள், வீடுகளில் ஆங்காங்கே ஒலிப்பெருக்கி, ஸ்பீக்கர்களை கட்டிவைத்துவிட்டார். பள்ளிக்கூடத்தில் இருந்து ஆசிரியர்கள் மைக் மூலம் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். காலையில் 10 மணி அளவில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருக்கும் மரங்கள், வீட்டு திண்ணைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்கிறார்கள். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் ஒலிப்பெருக்கிகள் வழியாக மாணவர்களை சென்றடைகிறது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக ஆசிரியர் சொல்லும் குறிப்புகளை நோட்டில் எழுதுகிறார்கள். தினமும் இரண்டு மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில், “கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் இருந்தே பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டன. எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களில் பெரும் பாலானோரிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாததால் ஒலிப்பெருக்கியை தேர்ந்தெடுத்தேன். ஐந்து ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து மைக் வழியாக பாடம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உதவியாக இருக்கிறார்கள். இந்த புதிய அணுகுமுறை மாணவர்களுக்கு பிடித்திருக்கிறது. நன்றாக புரிந்து கொள்கிறார்கள். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, ஏதேனும் கேள்வி கேட்க விரும் பினாலோ அவர்கள் மற்ற வர்களுடைய மொபைல்போன்களில் இருந்தும் கேள்விகளை எனக்கு அனுப்புகிறார்கள். அடுத்த நாள் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்போம்” என்கிறார்.

இந்த கற்றல்முறைக்கு கிராம மக்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்துள்ளது. புதிய பாணியில் மாணவர்கள் பாடம் படிப்பதாக கூறுகிறார்கள். தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தியின் முயற்சியை பாராட்டியுள்ள மாவட்ட கல்வி அதிகாரி பூனம் குமாரி, “இங்குள்ள 2,317 அரசுப்பள்ளிகளும் இதே மாதிரியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதும் ஆசிரியர்கள் அவசரம், அவசரமாக பாடத்திட்டங் களை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது, மாணவர்களுக்கும் சுமை அதிகரிக்காது” என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. 

Post Top Ad