Cbse பள்ளி மாணவர்களுக்கு கூட்டாச்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன
CBSE பள்ளி மாணவர்களுக்கு கூட்டாச்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரையில் கட்டுக்குள் வராதநிலையில், நாடு முழுவதும் கல்விநிறுவனங்களுக்கு தற்போதுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. எப்போது திறக்கப்படும் என்பதும் இதுவரையில் முடிவு செய்யப்படாமல் இருந்துவருகிறது. இந்தநிலையில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு 30 சதவீதம் அளவுக்கு பாடங்கள் குறைக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் அகிய பாடங்களில் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. 11-ம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் முக்கிய பாடங்களான கூட்டாச்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளன. பிராந்திய அரசுகள் என்ற பாடத்தில் ஏன் பிராந்திய அரசுகள் தேவை எனும் பகுதி நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிராந்திய அரசுகளின் வளர்ச்சி பாடமும் நீக்கப்பட்டுள்ளது.12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் பாடத்தில், ‘தற்போதைய உலகில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், பிராந்திய கனவுகள் ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மாறிவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, திட்டம் குழு மற்றும் ஐந்தாண்டு திட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளம.
அண்டை நாடுகளுடன் உறவு: பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம், சாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயகத்தின் சவால் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன
0 Comments:
Post a Comment