Icse - 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Icse - 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சான்றிதழ் கல்வி வாரியமான ஐ.சி.எஸ்.இ. தலைமை செயல் அதிகாரி ஜெர்ரி அரத்துாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. முடிவுகளை ஐ.சி.எஸ்.இ.யின் www.cisce.org என்ற இணையதளம் வழியாகவும் மாணவர்களுக்கான அலைபேசி எஸ்.எம்.எஸ். வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மறு ஆய்வின் வழியே தெரிந்து கொள்ள ஜூலை 16ம் தேதிக்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டிஜிட்டல் வழியில் பதிவிறக்கம் செய்யலாம். மத்திய அரசின் 'டிஜி லாக்கர்' தளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive