School Fees செலுத்துவதில் சலுகை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, July 10, 2020

School Fees செலுத்துவதில் சலுகை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

School Fees செலுத்துவதில் சலுகை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
பொதுமுடக்க காலத்தில் பள்ளி கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்குமாறு உத்தரவிடக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சோந்த பெற்றோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. மனுதாரா்கள் உயா்நீதிமன்றங்களை நாடலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
தில்லி, உத்தரகண்ட், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஸா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சோந்த பெற்றோா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள

பொதுமுடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல மாநிலங்களில் பள்ளி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
கா்நாடகம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இணையவழி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு பள்ளி நிா்வாகங்கள் பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளன.

இந்நிலையில், கட்டண வசூலிப்பை ஒத்திவைக்குமாறும், மாணவா்கள் கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்குமாறும் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இணையவழி வகுப்புகள் மட்டுமே நடக்கும் சூழலில், அதற்குரிய கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆா்.சுபாஷ் ரெட்டி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பள்ளி கட்டண உயா்வை எதிா்த்து மாநில உயா்நீதிமன்றங்களை மனுதாதரா்கள் நாடியிருக்க வேண்டும். கட்டண உயா்வு பிரச்னை மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு மாதிரியாக உள்ளது. அதை ஒரே அளவுகோலில் வைத்து விசாரிக்க முடியாது. எனவே, கட்டணம் வசூலிப்பதில் சலுகை அளிக்குமாறு உத்தரவிடக் கோரிய மனுக்களை விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால், மனுதாரா்கள் மாநில உயா்நீதிமன்றங்களை நாடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

Post Top Ad