Tds படிவத்தில் மாற்றம் !! என்ன மாற்றம் தெரியுமா ?

Tds படிவத்தில் மாற்றம் !! என்ன மாற்றம் தெரியுமா ?
மத்திய நேரடி வரிகள் வருவாய் ஆணையமானது இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ; இனி வரி பிடித்தம் செய்பவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வருவாய் மூலத்தில் வரி பிடித்தம் செய்யவில்லை என்றால் , அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.


அதேபோல் வங்கிகள் இனி தங்கள் கிளைகளில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் எடுக்கப்பட்டால், அதற்கான வருவாய் மூல வரி பிடித்தம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு ,

இ-காமர்ஸ் வர்த்தகம் செய்வோர், பரஸ்பர சகாய நிதி மற்றும் தொழில் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்படும் ஈவுத் தொகை, வங்கிகளில் இருந்து பெரிய அளவில் பணம் எடுத்தல் ஆகியவை டி.டி.எஸ் (வருவாய் மூல வரி பிடித்தம்) வரம்பிற்குள் கொண்டு வரப்படுகின்றன.

என்.ஆர்.ஐகள் உள்ளிட்டோருக்கான டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்வதற்கான 26Q and 27Q மற்றும் ஆகிய படிவங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive