மூன்றாம் பாலினத்தினருக்கு( Tri Gender) அரசுப்பணியில் பட்டியலினத்தவருக்கு நிகரான வயதுவரம்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 9, 2020

மூன்றாம் பாலினத்தினருக்கு( Tri Gender) அரசுப்பணியில் பட்டியலினத்தவருக்கு நிகரான வயதுவரம்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தினருக்கு( Tri Gender) அரசுப்பணியில் பட்டியலினத்தவருக்கு நிகரான வயதுவரம்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.




மூன்றாம் பாலினத்தினருக்கு( TRI GENDER) அரசுப்பணியில்பட்டியலினத்தவருக்கு நிகரானவயதுவரம்பு அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
.........................................................................
சமூகசெயற்பாட்டாளர் கிரேஸ் பானுஅவர்களது பதிவு.

தேனிமாவட்டத்தை சேர்ந்த திருநங்கைஆராதனா என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த காவலர்பணிகோரி தொடர்ந்த வழக்கின்அடிப்படையிலும் உச்சநீதிமன்றதின்நால்சா vs இந்தியா 2014 ல் வழங்கியதீர்ப்பின் அடிப்படையிலும்26.ஜூன்2020 அன்று தமிழ்நாடு சீருடைபணியாளர் ஆணையம் இனிவரும்காலங்களில் மாற்றுபாலினத்தைசார்ந்தவர்களுக்கு பட்டியலின மக்களைபோல வயதுவரம்பை தளர்த்தி  ஆணைவிடுத்துள்ளது ..இது மிகவும்மகிழ்ச்சியான மேலும் ஒருபடி சமூகமுன்னேற்றத்திற்கான வழி. அதேநேரத்தில்மாற்றுபாலினத்தவர்களும்பட்டியிலனத்தவர்களும் ஒன்றல்ல . நாங்கள் சமூக,பொருளியல் ,பாலினரீதியில் எல்லோரையும் விடமேலதிமாக ஒடுக்கப்படுகிறவர்கள்.கற்கும் வயதில் பாலின தீண்டாமைகொடுமைகளை எதிர்கொண்டு, கல்விஇடைநிற்றலை அனுபவிக்கும்எம்சமூகத்தவற்கு மேலதிக வயதுவரம்பு வேண்டும். தனிதனியாகசட்டபோராட்டம் நடத்திதான்மாற்றுபாலினத்தவர்கள் இலக்கைஅடைய வேண்டுமெனில் அதற்குநூற்றாண்டு  போதாது .உச்சநீதிமன்றவழிகாட்டலின்படி மாநிலஅரசாங்கங்கள்கல்வி,வேலைவாய்ப்பில் இடப்பங்கீடுவழங்குவதே  எம்  சமூகத்தவர்நீதிமன்றவாயில்களில் அல்லாமல்கல்வி,வேலைவாய்ப்பின் வாயில்களைநேரடியாக நுழைவதற்கு வழியாகும்.

எம்சமூக முன்னேற்றதில் அக்கறைகொண்டு ,எங்களோடு உடனின்று,எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்சட்டபோராட்டம் நடத்திய உயர்நீதிமன்றவழக்குரைஞர் திருமிகு.சஜீவ்அவர்களுக்கு எம் சமூகத்தின் நன்றி.

Post Top Ad