முன்னாள் குடியரசு தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி காலமானார்

முன்னாள் குடியரசு தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி காலமானார்


12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020

12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020


ராகு - கேது என்பவர்கள் சாயா கிரகம் அவை சர்ப்ப கிரகம் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

வாக்கிய பஞ்சாங்கம்படி செப்டம்பர் ஒன்றாம் தேதியும் 2020, திருக்கணித பஞ்சாங்கம்படி 23 செப்டம்பர் 2020, ராகு மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கும், கேதுவானவர் தனுசுவிலிருந்து விருச்சிகாகத்திலும் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த பெயர்ச்சி ஒன்றரை காலம் ஆகும். ராகு கேதுவை தவிர மற்ற வருட கிரங்களான குரு, சனி ஆகியவற்றையும் வைத்துதான் பலன் சொல்ல வேண்டும்.

இந்த பெயர்ச்சி ஒருசில ராசிக்காரர்களுக்கு ராகு ஒருவித நல்ல பலனையும் கேதுவானவர் ஒருசில நற்பயன்களை தரவல்லவர். முக்கியமாக ராகு-கேது பெயர்ச்சி உங்கள் செயலின் தாக்கம் 30% மட்டுமே பலன் தரவல்லது உங்களுடைய ஜனன ஜாதகமே 100% தசைபுத்தி வாயிலாக பலனை சொல்லும்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மேஷ ராசிக்காரர்கள் 2ல் ராகுவும் 8ல் கேதுவும், 9ல் குருவுடன் 10ல் சனியும் சஞ்சரிக்கும் காலம் என்ன என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள் மன தடுமாற்றம் மற்றும் செயல் ஓட்டம் ஓடி களைப்பாறும் காலம் இந்த ராகு பெயர்ச்சி.

2இல் ராகு இருப்பது பேச்சில் நிதானம் இருக்காது, முக்கிய குடும்ப உறவில் உள்ளவர்களிடம் பேசும்போது பலமுறை பார்த்து பேசவேண்டும்.

திருமணம் என்ற போது புது உறவு வர இருக்கும் நேரம். சிலருக்கு இருந்தாராம் யோகம் செயல் படும் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.

குருவின் பார்வை சந்திரனை பார்த்து உள்ளது முக்கியமாக 5 ம் பாவத்தோடு தொடர்பு உள்ளது அதனால் குழந்தை பாவம் செயல்படும் நேரம். குழந்தை பெரு இல்லவதற்கு கட்டாயம் குருவின் அருளால் மழலை சத்தம் கேட்கும் நேரம்.

சுக்கிரன் வீட்டிற்கு ராகு வரும் காலம் பணம், வீடு பாக்கியம் மற்றும் பொருள் சேரும் காலம். தன ஸ்தானத்தில் ராகுவும், 8ல் கேது ஜாதகருக்கு குரு சம்பத்தோடு கேது அமர்ந்தால் பல்வேறு வழிகளில் பணம் வங்கியில் சேர்க்கும் பாக்கியம் கிட்டும் அது உங்கள் தசா புத்திக்கு ஏற்ப.

அஷ்டமாதிபதி பாதகாதிபதி பார்வையோடு தொடர்பு ஏற்படுவதால், நோய், நீர், நெருப்பு மற்றும் ஒரு சில ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவும் மருத்தவ சிகிச்சியில் இருப்பவர் ஆபரேஷன் போன்ற நிகழ்வுகளும் ஏற்படும். அதுவும் தொடர் உடல் சார்ந்த பிரச்சனையில் இருப்பவர்கள் நல்ல ஒரு தீர்வு உடலில் ஏற்படும்.

உங்கள் ஜாதகத்தில் 2ம் அதிபதி சரியாக இல்லையென்றால் திருமணம் ஆனவர்கள் பிரிவு விரிசல் என்று செல்லும் நேரம். திருமணம் ஆனவர்கள் முடிந்தவரை அமைதிக்காகவும் தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்கவேண்டும்.

தொழில் முடங்கி இருந்தவர்கள் முடிந்த வரை உங்களுக்கு உயர்வுகள் இருக்கும். உங்களுடைய கடன் சார்ந்த பிரச்சனைகளை கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு கிட்டும்.

ராகு செவ்வாய் சாரத்தில் சுக்கிரன் வீட்டில் இருந்து அவர் நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு கட்டும் யோகம் ஏற்படும்.

தாயாரின் உடல் நிலையை பாதிக்கும் நேரம். ஒரு சில பிரச்சனை இருந்தாலும் தாயாரை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்.

குழந்தைகள் படிப்பில் கொஞ்சம் தெளிவு ஏற்படும். உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாட்டு நிகழ் நிலை (online ) படிப்பை படிப்பார்கள்.

பரிகாரம்
1. முருகனுக்கு செவ்வாய் கிழமை பால் பாயசம் நெய்வேத்தியம் செய்து மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

2. வைதீஸ்வரன் கோவிலுக்கு இந்த ஒன்றரை வருடத்திற்குள் சென்று உப்பு மிளகு வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வரலாம்.

3. மருத்துவத்திற்கு ஏழை எளியோருக்கு உதவலாம், முக்யமாக ரத்த தானம் செய்யலாம்.



ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

ரிஷப லக்கின/ ராசிக்காரர்கள் 1ல் ராகுவும், 7ல் கேதுவும், சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
அதீத அழகை மேம்படுத்தும் மற்றும் உணவு பிரியர் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் வீட்டில் ராகு என்பது உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப ஒரு சில யோகம் அமையும்.

மன ரீதியாக பிரச்சனை அதிகப்படுத்தி உங்களை வலுப்படுத்தும் நேரம் இது. ஒரு செயலை செய்யும் பொழுது பலமுறை யோசித்து செயல்படுத்தவும். வயதானவர் மற்றும் பெண்களாக இருந்தால் தாக்கம் கொஞ்சம் அதிகம் இருக்கும்.

தன்னிலை உயரத்தை அடைய ராகு தவறான கோணத்தை காட்டும். உங்கள் செயலை நேர்மறை ஆற்றலை கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

ராகுவிற்கு ஏற்ற வீடு ரிஷபம், ஆடம்பரத்தை ரூபம் ரிஷபம் அவர் வீட்டுக்கு ராகு வரும் காலம் திருப்தி மற்றும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.

மருத்துவம் கண்டுபிடிப்பதில் சுக்கிரனுக்கு முக்கிய பங்கு. சந்திரன் உச்சம் பெரும் ராசி, ரிஷப அதிபதி சுக்கிரன் வீட்டில் ராகு வரும் காலம் பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்பு நடந்துகொண்டே இருக்கும் ஒரு தீர்வும் கிட்டும்.

திருமணத்திற்கான முயற்சி எடுக்கலாம். ராகு கேது தோஷம் பெற்றவர்கள் நிவர்த்தி பெரும் காலம். ஒரு சிலருக்கு களத்திர பிரிவை ஏற்படுத்தும் நேரம்.

அஷ்டமத்தில் இருக்கும் குரு உங்களுக்கு பெரும் அவமானம் பிரச்சனை என்று கொடுத்திருப்பார் அவர் ஓரிரு மாதங்களில் ஒன்பதில் நகர்ந்து உங்கள் ராசியை பலப்படுத்த செய்வார் .

மூத்த சகோதரர்கள், தாய் மற்றும் உங்களோடு ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் காலம்.

ஒருசில காலங்களில் மேல் குரு நீசபங்கம் ஆகும் நேரும், சனி உடன் சேரும்போது தொழிலில் ஒரு சில சிறு மாற்றம் நிகழும்.

குழந்தைகள் படிப்பில் மற்றும் அவர்களுக்கு தேவையான எதிர்கால தேவைக்கு கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்
1. பஞ்சமியில் கருடாழ்வார் தரிசனம் முக்கியம். நாச்சியார் கோவில் கோவில் சென்று வழிபடு செய்வது நன்று,

2. மஹாலஷ்மி, அஷ்ட லக்ஷ்மி பூஜை செய்வது நன்று.

4. மன ரீதியான யோகா மற்றும் நமச்சிவாயா மந்திரம் உங்களுக்கு உதவும்.

5. அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட ஸ்வாமியை தரிசிக்கலாம். அத்தி காய் மற்றும் பழம் உணவில் உட்கொள்ள வேண்டும்.



மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அன்பார்ந்த மிதுன ராசிக்காரர்கள் 12ல் ராகுவும், 6ல் கேதுவும், 7ல் குருவும் 8ல் சனியும் சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.

மிதுன ராசிக்காரர்களை புரட்டிப்போட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்ச கொஞ்சமாக உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். ஆனாலும் ராகு நிற்கும் சாரம் செவ்வாய் அதனால் சண்டை சச்சரவு, நிம்மதியற்ற தூக்கம் இருக்கும். இதுவும் ஒருசில மாதத்திற்கு பிறகு சரியாகிவிடும்.
நீண்ட நாள் வழக்கு சார்ந்த பிரச்சனை ஒருசிலருக்கு மருத்துவ சிகிச்சை வாயிலாக தீர்வுக்கு கொண்டுவரும்.

பெற்ற பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படும். வெளி தேசத்தில் இருப்பவர்கள் தாய் தந்தையுடன் சேரும் காலம் வரப்போகிறது.

அடுத்த வருட ஆரம்ப கட்டத்தில் உங்கள் விற்காத பழைய வீடு விற்கப்படும். வீண் செல்வுகளை பார்த்து செலவு செய்ய வேண்டும்.சேமிப்பு நிதி கணக்கில் பணம் குறையும்.

வீட்டில் அடிதடியில் இருந்தவர்களை எப்படியாவது அமைதியுடன் பிரிந்தவர்கள் சேர்த்துவிட்டால் கணவன் மனைவி அந்நியோனியம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் கைகூடும் நேரம் இது.

4இல் கேதுவின் பார்வை என்பது வாடகை வீடு , வண்டி சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு பின்பு உங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொள்வீர். உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

மகிழ்ச்சியை தள்ளி வைத்து உழைப்பில் அதிக கவனம் செலுத்தும் நேரம்.

சொந்த தொழில் செய்ப்பவர்கள் வெளிநாட்டு தொடர்பு கொண்டவர்கள் உங்கள் முயற்சி அவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் காலம். ஆனால் வேலையில் மற்றும் சொந்த தொழிலில் கவனம் தேவை.

போட்டியாளர்கள் உங்களுக்கு இருப்பார்கள் இருந்தும் எதிரிகளை வெற்றி பெறுவீர். இவற்றின் தொடர்ச்சியாக உடல் சார்ந்த பிரச்சனை நிகழும்

பரிகாரம்

1. மகா விஷ்ணுவை புதன் கிழமைகளில் தரிசிக்க வேண்டும்

2. சங்கட சதுர்த்தியில் அருகம் புல் வாங்கிக்கொடுத்து வினாயகரை தரிசிப்பது நன்று

3. பெரிய மகான்கள் வழிபடு அவசியம்.

4. தெய்வீக பிரச்சாரங்களை மகான்கள் பேசுவதை கேட்கவேண்டும்



கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அன்பார்ந்த கடக ராசிக்காரர்கள் 11ல் ராகுவும் 5ல் கேதுவும், 6ல் குருவுடன் 7ல் சனியும் சஞ்சரிக்கும் காலம் என்ன என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
இந்த சாயா கிரகங்கள் 3,6,11 பாவங்கள் சிறந்தது. முக்கியமாக கடக ராசிக்கு இது மிக பெரிய யோகத்தை ராகுவால் ஏற்ப்படும்

வேலை செய்யும் இடத்தில நிறுவன உங்களுக்கு கவுரவமான நிலை, லாப கரமான நிலை உருவாகும் காலம் இன்னும் ஓரிருக்காலத்தில் குருவின் அருளோடு நற்பயன் நடைபெறும் .

கடகம் மற்றும் ரிஷப தொடர்பு சந்திரனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதனால் வீட்டில் பாசம் இருக்கும், தாயால், தாய் மூலம் லாபம், தாயின் உறவால் ஜாதகர் சந்தோசம் அடைவர்.

உங்களுக்கு கண்ட சனி மற்றும் கேதுவின் தாக்கம் பிரயாணத்தில் கவனம் தேவை. திருமணம் தாமதமாகும்.

கேது 5ல் உச்ச நிலையில் செவ்வாய் வீட்டில் இருப்பது ஒரு வித உடல் உபாதைகள் ஏற்படுத்தும் முக்கியமாக தைரொய்ட்டு சுரப்பி, வயிற்றில் பிரச்சனை மற்றும் கரு தரிப்பதில் பிரச்சனை என்று ஏற்ப்படும் நேரம் கவனம் தேவை.

சிறு சிறு உடல் உபாதைகளுக்கு முடிந்த வரை சித்த மருத்துவத்தை பின்பற்றவும்.

உங்கள் தந்தைக்கு, சகோதரர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் கவனம் தேவை.

குழந்தைகளு படிப்பாற்றல் செயப்படும் நேரம் அதேபோல் பெற்றோர்கள் அவர்கள் மீது கவனம் தேவை.

இளைஞர்களுக்கு காதலில் நாட்டம் இருக்கும் .காதல் என்னும் வலையில் கேது சிக்க வைப்பார். சரியான முறையில் உங்கள் வயதிற்கு ஏற்ப முடிவு செய்யவும்.

பரிகாரம்
1. வீட்டில் குலசாமிக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

2. தினமும் வினாயகரை தரிசனம் செய்து வணங்கி விட்டு செல்ல வேண்டும்.

3. திருத்தலைச்சங்காடு, திருநாலூர் மயானம், சந்திரமௌலீஸ்வரர்.

4. கோவிலுக்கு சென்று பசு நெய் தீபம் ஏற்றி உங்களுக்கு முடிந்ததை காணிக்கையாக செலுத்த வேண்டும்.

5. பால், கல்கண்டு சாதம், தயிர் சாதம் மற்றும் தேங்காயால் செய்த உணவுகளை பௌர்ணமி காலத்தில் அல்லது உங்கள் நட்சத்திர நாளில் பிரசாதமாக கொடுக்கவும்.



சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

அன்பார்ந்த சிம்ம ராசிக்காரர்கள் 10ல் ராகுவும் 4ல் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
எவருக்கும் தலை வணங்கா கம்பீரமான தோற்றம், பேச்சு, மற்றும் பெரியவர் ஆசீர்வாதம் பெற்றவர் சிம்ம ராசி காரர்களே ஒரு சில யோகம் தரும் காலம் .

10ல் ஒரு பாவியாவது இருப்பது நன்று. சிம்மத்திற்கு 10ம் பாவத்தில் சுக்கிரன் வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார். பன்மடங்கு பல்வேறு விஷயங்களில் உங்களுக்கு வேலை ஊக்கம் ஏற்படுத்தும்.. கடமை செய் பலன் தானாக பிற்பகுதியில் வந்து சேரும் கட்டம்.

புதிய அறிவாற்றல் கொண்டு விவசாயம், கடல் சார்ந்து தொழிலில் இருப்பவர்கள், சினிமா , டெக்னாலஜி துறையில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

வீட்டில் பெற்றோர், மற்றும் மூத்த உறுப்பினர் திருமணம் நிகழ்ச்சி வீட்டில் சந்தோஷத்தை ஏற்படுத்து.

வீட்டில் ஒரு சில வழக்கு பிரச்சனை ஏற்ப்படும். தாயாரோடு ஒரு பிணக்கு ஏற்ப்படும் . தாய்க்கு தேவையனதை கடமையை செய்ய வேண்டும்.

அஷ்டமத்தை ராகு சனி பார்வை இடுவது அவ்வளவு நல்லது அல்ல. வியாதிகள் கொஞ்சம் தீவிரம் காட்டும் நேரம் . முடிந்தவரை மாஸ்டர் checkup செய்யவும். உங்களு சுகத்திற்காக முட்டு கட்டை அமையும்.

வீட்டை புதுப்பிக்கும் நேரம். வீட்டில் வாஸ்து பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூர்விக சொத்து பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அரசாங்க துறையில் வேலைக்கு காத்திருப்பவர்கள் வேலை கிடைக்கும் காலம். இந்த பிரபஞ்ச சக்தி புதிய மாறுபாடு அரசியலில் நிகழும்.

கேட்ட இடத்தில கடன் கிடைக்கும். ஆனால் வட்டிக்கு அதிகம் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

பரிகாரம்
1. கோதுமையால் ஆன உணவு, பரங்கிக்காய் தானம் செய்வது நன்று.

2. குலசாமிக்கு படையல் போடுவது, நேர்த்திக்கடன் செய்வது நன்று.

3. திருமீயச்சூர் லலிதாம்பிகை அல்லது சூரியன் உதிக்கும் ஸ்தலம் சென்று தரிசித்து வரவும்.

4. பழம் பெரும் சிவன் கோவிலுக்கு கட்டிட நிதி பணமாகவோ பொருளாகவோ கொடுக்கலாம்.



கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அன்பார்ந்த கன்னி ராசிக்காரர்கள் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆற்றல் கொண்ட இலக்கிய மனம் கொண்ட கன்னி ராசி காரர்கள் முயற்சி மூலதனமான கொண்டு உயரும் ஒரு பொற்காலம். அவரவர் பாக்கியத்திற்கு ஏற்ப உங்களுக்கு உரிய பலம் உங்களை உயர்த்த போகும் நேரம்.

வீட்டில் உள்ள தலைவனால் இருந்தால் உங்களுக்கு குலசாமி அருள் கிட்டும் நேரம், அதுவும் உங்கள் பூர்வ புன்னியத்தின் கர்மாவிற்கு ஏற்ப இருக்கும்.

தந்தை தொழில் உங்களுக்கு உதவும் காலம் இது. தொழிலில் முடங்கி இருந்தவர்கள் கொஞ்சம் மூச்சு விடும் நேரம் சனிபோல் ராகு அதனால் வேலையில் நாட்டம் அதிகம் இருக்கும், அதனால் பொருள் சேர்க்கை இருக்கும்.

3இல் கேது நன்று வாக்கில் தெளிவு இருக்கும், தைரியதோடு செயல் படுவீர்கள். எந்த முயற்சியும் சற்று உயர்வு பெரும்.

பழய வீடு, நிலம் விற்காதவர்களுக்கு உங்கள் சொத்து கணிசமான விலையில் விற்கும் நேரம்.புதிய ஒரு investment இருக்கும்.

குடும்பம் என்ற கர்மா உங்களை உட்படுத்தும் அதாவது திருமண பந்தம் உங்களுக்கு புதிதாக ஏற்படுத்தும்.

முகம், பற்கள் மற்றும் காது மூக்கு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

தந்தைக்கு ஒருவித கண்டம் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பழைய வீடு வாகன கடன் சிறுக சிறுக அடைத்து விடுவீர்கள்.

பரிகாரம்
1. தாயாரோடு சேர்ந்து இருக்கும் பெருமாளை வணங்குவது நன்று.

2. பச்சை பயிறு, உளுந்து சார்ந்த உணவை தனமாக கொடுக்கவும்.

3. இஷ்ட தெய்வத்தை தினசரி பிராத்தனை செய்ய வேண்டும்.

4. திருப்பதி சென்று வந்தால். ஒரு மிகப்பெரிய திருப்பம் உண்டு.

5. மாமரத்தை வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று நடுவது நன்று.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
அன்பார்ந்த ராசிக்காரர்கள் 8ல் ராகுவும், 2ல் கேதுவும், 3இல் குரு, 4இல் சனி சஞ்சரிக்கும் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.

என்னதான் நீதி, நியாயம், நேர்மை, நகைச்சுவை என்று இருந்தாலும் உங்களுக்கு பல்வேறு வழியில் பிரச்சனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிய விஷயம் அதாவது தொழில் சார்ந்த விஷயம் கற்பீர்.

மறைந்த விஷங்களை ஆராய்ச்சியில் ஈடுபடுவார். சுக்கிரன் வீட்ல ராகு Phd, ஆராய்ச்சி துறையில் இருக்கும் மாணாக்கர் வெற்றி பெற குரு, ராகுவின் அருள் கிட்டும் .

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பலிக்கும் தன்மை கொண்டது முக்கியமாக உறவினர் மற்றும் களத்திரத்தோடு பேச்சில் அமைதியை காக்காவும்.

தொழிலில் முடங்கிய நீங்கள் ஒருவித புது ஆற்றுலுடன் செயல்படும் நேரம் இது.

நீங்கள் நினைக்க முடியாத இடத்திலிருந்து திடீர்னு வருமானம் வரும். ஆனால் பணம் என்ற விஷயம் உங்களை தவறானவர்களுக்கு உங்களை கொடுக்க வைக்கும் அதனால் கவனம் தேவை.

சனியின் பார்வை ராசியில் பதியும் பொழுது மனக்குழப்ப நிலையை கொண்டுவரும் . ராகுவின் பார்வை 6ம் வீட்டையும், ஆட்சி சனி, உச்ச வீடான பத்தாம் வீட்டையும் பார்க்கும் பொழுது, 2இல் கேது பேச்சை தொழிலாக கொண்டவர்கள் முன்னேற்றம் இருக்கும். முக்கியகக செய்தித்துறை, ஆன்மீகம், ஜோதிடம், புரோகிதர்கள், வழக்கறிஞ்சர், ஆசிரியர்கள் தங்கள் துறைகளில் உயர்வு பெரும் காலம்.

ரத்தசம்பந்தமான, சிறுநீரக, cholestral பிரச்சனை சிறு சிறு நோயின் தாக்கம் ஏற்படுத்தும் 4 மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவீர் மருத்துவ செலவு உண்டு.

சுக்கிரன் வீட்டிற்கு ராகு இருப்பது மனைவி, தாய், மற்றும் வீட்டில் உள்ள பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும்.

புதிய வீடு, தொழில என்று செயல் படுத்தாமல் இருப்பது நன்று. பழய வீடு வாங்கும் நேரம் ஒரு சிலருக்கு உண்டு.

குரு உங்களுக்கு நண்பர் அல்ல அவர் 3இல் இருப்பது நல்லது அல்ல. மனோ தைரியம் இழக்க செய்வார். எந்த செயலும் முடிவு எடுக்கும் நீங்கள் தவறான முடிவு எடுக்க வைக்கும். அதனால் பலமுறை யோசித்து கடவுளிடம் சென்று முறையிட்டு செயல்படுத்தவும்.

பரிகாரம்
1. திருவண்ணாமலை, திருபுவனம், திருவெற்றியூர், திருஇராமனதீச்சரம், திருநீடூர் ஆகிய எதாவது கோவிலில் சென்று மகிழம் மர அருகில் சென்று சிவனை நினைத்து சிறிது நேரம் அமர்ந்து நினைத்ததை வேண்டிக்கொள்ளவும். பின்பு அங்குள்ள எம்பெருமானுக்கு பசு நெய் தீபம் ஏற்றவும்.

2. கருட பகவான், நந்தி, குரு மற்றும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு உங்களை பலப்படுத்தும்.

3. சகோதர சகோதரிக்கு உங்களால் முடிந்ததை செய்யவும்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக அன்பார்ந்த ராசிக்காரர்கள் 7ல் ராகுவும், ராசி /லக்கினத்தில் கேதுவும், குரு இரண்டிலும், மற்றும் 3இல் சனி சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
மனதில் நினைத்ததை பளிச் என்று சொல்லும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு சில மாற்றம் உங்களுக்கு ஏற்படும். உங்களால் வார்த்தை தான் உங்களுக்கு எதிரி.

உங்கள் முயற்சியால் தொழில் சார்த்த விஷயங்கள் முன்னேற்றம் கொடுக்க ஆரம்பிக்கும்.

உங்களுக்கு மனக்குழப்பத்துடன் தெளிவு இல்லாத விஷயங்களை இருந்து ஞானம் பிறக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் இருக்கும்.

குடும்பத்தில் ஒரு சிலர் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துவார் உங்களுக்கு நன்மை தரமாட்டார்கள்.

ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் முக்கியமாக 3 மாதங்ககுக்கு நிதானம் தேவை. உடலில் ஏற்படும் பிரச்சனைகளை அவ்வப்போது மருத்துவரை பார்த்து சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

கர்மகாரன் உங்களுக்கு 3இல் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது நன்மை பயக்கும். உங்கள் கடமையை செய்ய பலன் தானாக சரியான நேரத்தில் பிற்பகுதியில் கிட்டும்.

திருமணம் தோஷம் உள்ளவர்கள் நிவர்த்தி அடைந்து திருமணம் நடைபெறும் காலம். ஒரு சிலருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும்
கணவன் மனைவி இடம் கொஞ்சம் விரிசல் இருக்கும், முக்கியமாக பெண்ணால் பிரச்சனை, தாய் வழி சொத்து பிரச்சனை, கூட்டாளி பிரச்சனை என்று ஏற்பட வாய்ப்பு உண்டு .

வெளியூர் சென்ற மாணவர்கள் படித்து முடித்து அவரவர் தாயகம் திரும்புவார்கள்.

தந்தைக்கு உடல் சார்ந்த பாதிப்பு இருக்கும் அதுவும் மனசம்பந்த பிரச்சனை கொண்டுவரும். முடிந்தவரை தந்தை நோக்கி பாசத்தை செலுத்த வேண்டும்.

ராகு சூரியன் சாரம் வரும்பொழுது அரசாங்க துறையில் வேலை வாய்ப்பு கிட்டும். அரசாங்க துறை மேன்மை படுத்தும் நேரம்.

கடவுள் அனுக்கிரகத்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு கிட்டும்.

பரிகாரம்
1. முருகனுக்கு தேன் பஞ்சம்பிரதாம் அபிஷேக்ம் செய்யவும். முக்கியமாக பைரவர், வக்ரகாளி, வீரபத்திரன் மற்றும் உக்கிர தெய்வங்களுக்கு பசும் பால் அபிஷேகம் செய்வது நன்று.

2. நேரம் கிடைக்கும் போது விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்தது கோவிலில் தானம் செயலாம்.

3. கருடபகவானுக்கு பிராத்தனை செய்வது நல்லது.

4. கருங்காலி மரக்கட்டை அல்லது கருங்காலி மாலை கொண்டு பூஜை செய்யலாம்.

5. வராஹி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றலாம்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அன்பார்ந்த ராசிக்காரர்கள் 6ல் ராகுவும் 12ல் கேதுவும், ராசி /லக்கினத்தில் குரு சேர்ந்து சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
தெய்வீக அனுகூலம் கொண்ட தனுசு ராசிக்கு ராகுவின் பார்வையில் இருந்து விடுபடும் நேரம். ராகு கேது உங்களுக்கு இந்த முறை அதீத நன்மைகள் கூட்டி கொடுக்கும். இருந்தாலும் மற்ற கிரங்களையும் சேர்த்து பார்க்கவேண்டும்.

சுக்கிரன் வீட்டில் ராகு இருப்பது, அதுவும் செவ்வாய் சாரத்தில் இருப்பது 6ம் பாவம் தொடர்பு கொண்டு இருப்பது ஒருவித நன்மை. உங்கள் தசா புத்திக்கு ஏற்ப இன்னும் ஒருசில மாதங்களில் கடன் வாங்கி உங்களுக்கு பிடித்தமான படி வீடு கட்டுவீர். கடன் பட்டவராக இருந்தால் கடனை தீர்க்கும் நேரமாக அமையும்.

தனுசு ராசிக்கு குரு யோகர் அவர் தற்பொழுது சந்திரனோடு சேர்ந்திருக்கும் காலம் ஒரு யோகத்தை மேம்படுத்தும். குரு 2க்கு வரும் காலம் தாய் வழியால் பெரும் லாபம், வீட்டு வாடகை மூலம் லாபம் ஏற்படும். ஷேர் மற்றும் வங்கியில் இருப்பு சேர்க்கை இருக்கும். புதிய வாகனம், ஆபரணம் வாங்கும் நேரம்.

உங்களுக்கு கெடுதல் என்று எடுத்து கொண்டால் உங்களுடனே நண்பர்கள் எதிரிகளாக இருப்பார். ஆனாலும் எதிரிகளை தும்சம் பண்ணும் நேரம். மற்றவர்கள் உங்களை போற்றும் காலம் இது. Respect position இருக்கும், உயர்வு உண்டு.

பணம் அதிகம் இருக்கும் காலம் அதுவே சில நேரங்களில் தவறான வழியில் உங்களை நடத்தி செல்வார்கள். தேவைக்கு ஏற்ப, சிறு வட்டிக்கு கடன் வாங்கவும். மாட்டிக்கொள்ளாமல் உஷார்.

மாணவர்கள் படிப்பில், முக்கியமாக ஆராய்ச்சியில் இருப்பவர்கள் உயர்வீர்கள்.

திருமணத்தில் பிரிந்தவர்கள் சேரும் காலம் இது.

ராகு செவ்வாய் சாரத்தில் இருக்கும் காலம், சனியின் தாக்கம் அனைத்தும் உங்களுக்கு வாகனம் மற்றும் வேறு சில விபத்தை ஏற்படுத்தும். அதனால் பயணிக்கும் நேரம் கவனம் தேவை.

பரிகாரம்
உங்களுக்கு குரு அனுகூலம் தேவை அதனால் மகன்கள் சித்தர்கள் வழிபாடு தேவை.

ஆஸ்ரமம் மற்றும் கோவிலுக்கு தேவையான பொருளுதவி அல்லது உணவுக்கு தேவையான வற்றை வாங்கி தரவும். இந்த பரிகாரம் கொஞ்சம் சனியின் பிடியிலும் உங்களை விடுவிக்கும்.

அரசமரம் உள்ள கோவிலுக்கு சென்று அரசமர மரத்தை சுற்றி வழிபாடு செய்யவேண்டும். அரசமரம் /வேப்ப மரக்குச்சி கையில் வைத்து கொள்ள வேண்டும்

குருவாயூர் படத்தை வழிபாடு செய்யவும், முடிந்தால் குருவாயூர் சென்று அங்கே தங்கி காலை தரிசனம் செய்யவும்.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

அன்பார்ந்த மகர ராசிக்காரர்கள் 5ல் ராகுவும் 11ல் கேதுவும், ராசி மற்றும் லக்கினத்தில் சனி சேர்ந்து சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
மற்றவர்களை கவரும், வலியவருக்கு உதவும் குணம் கொண்ட மகர ராசிக்காரர்கள் 71 /2 சனியில் பிடிபட்டு ஜென்ம சனியாக இருப்பார் . சந்திரன் சனி சேர்க்கை என்பது மனதை ஒருநிலை படுத்தாவண்ணம் இருக்கும்.

வீட்டில் நல்ல சுப செலவு ஏற்படும், முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்ற செலவு ஏற்படும்.

மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குழந்தை பேறு கிடைக்கும் நேரம்

கல்லூரி மாணாக்கர்களுக்கு ஏற்ற பாட துறை உங்கள் முயற்சி செய்தல் கிட்டும்

கேது 11ல் இருப்பது நன்று , உங்களுக்கு லாபம் அதிகம் இருக்கும். ஆனால் மூத்த சகோதரரால் பிரச்சனை ஏற்படும்

நீண்டநாளாக இருந்த திருமணம் ஆகாதவர்களுக்கு நவம்பருக்கு மேல் திருமண யோகம் கூடி வரும். முக்கியமாக மறுத்தார திருமணம் அமையும் . பிரிந்த தம்பதியர்கள் சேர்வார்கள்.

குரு சனியை தொடும் காலம் தொழிலை புதுப்பிப்பார். கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் துறை, பத்திரிகை துறை சார்ந்தவர்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். சந்தோஷத்தை தரவல்ல நேரம்

உடலில் உள்ள பிரச்சனை என்றல் நினைவாற்றல் குறையும் , ரத்தத்தில் count மாறுபடும், சிறுநீரக பிரச்சனை, சர்க்கரை, சளி சார்ந்த பிரச்சனை ஏற்படுத்தும்.

பரிகாரம்
1. பழம்பெரும் சிவன் கோவில்களில் தியானம் செய்யவேண்டும். யோகா சிறந்தது

2. ஈட்டி மரம் குறிப்பாக, பூராட நட்சத்திரத்தன்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வது

3. கருங்கல்லால் செதுக்கிய பிள்ளையாருக்கு பசும்பாலில் அபிஷேகம் அல்லது பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை வழிபடவேண்டும்.
4. திருவோணம் நட்சத்திரம் அன்று விஷ்ணு கருடாழ்வாரை தரிசிக்க வேண்டும்.



கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அன்பார்ந்த கும்ப ராசிக்காரர்கள் 4ல் ராகுவும் 10ல் கேதுவும், இன்னும் ஓரிரு மாதங்களில் சனியும் குருவுடன் சேர்ந்து 12ல் சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
என்ன நினைக்கீர்கள் தெரிய வண்ணம் இருக்கும் தெய்வீக அருள் கொண்ட கும்ப ராசிகாரர்கள் பூர்வீக சாபத்தில் இருந்து தற்பொழுது வெளி வரும் நேரம்.

தொழிலில் காரகன் செவ்வாய் சாரத்தில் ராகு உள்ளே செல்லும் போது பல நஷ்டங்களில் இருந்து சிறிது சிறிதாக புத்தியுடன் விடுபடும் நேரம். மற்றும் உங்கள் 2ம் வீட்டை ராகு பார்க்கும்போது குடும்ப உறவையும் பலப்படுத்தும்

தொழில் விஷத்தில் ஒரு சில பிரச்சனை தடங்கல், வாக்குவாதம் என்று ஏற்படும். அதனால் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். தொழில் சார்ந்து சிறுதூர பயன் அதிகமாக இருக்கும்.

பத்தில் ஒரு பாவி அதாவது கேது இருப்பது நன்று ஆனால் வேலையை மாற்றிவிடும் . முக்கியமா புதிய மற்றும் கூட்டு தொழில் யோசித்து முடிவு எடுக்கவும்

நிறைய ஸ்ட்ரெஸ் இருப்பதால். சிறு சிறு உடல் உபாதைகள் உங்களுக்கு ஏற்படும் . உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும்.

4ல் ராகு இருப்பதால் தாயாருக்கு உடல் பாதிப்பு ஒருசிலருக்கு அறுவை சிகிட்சையும் வேறுபடும்.

சுக்கிரன் வீட்டில் , 4ல் ராகு இருப்பதாலும் 6ம் வீட்டை பார்வை இடுவதாலும் கடன் வாங்கி நீங்கள் ஆடம்பர அழகான வீட்டை கட்ட செய்வீர்கள்

கூட்டு தொழிலால் மற்றும் களத்திரத்தால் உங்களுக்கு செலவு ஏற்படும்

மாணவர்கள் படிப்பில் மற்றும் படிப்பு சார்ந்த விஷயத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். ஆன்லைன் கோர்ஸ் படிப்பை அதிகம் படிப்பீர்.

பரிகாரம்

1. ஹோமம் செய்வது நல்லது. அல்லது கோவில்களில் ஹோமம் நடைபெறும் போது உங்களால் முடிந்ததை வாங்கிக்கொடுத்து ஹோமத்தில் கலந்து கொள்ளவும்

2. வன்னி மரம் தல விருட்சமாகக் கொண்ட சிவனை வழிபடுவது நன்று.

3. தேய்பிறை பஞ்சமி திதி வராகி தாயை நெய் தீபம் ஏற்றி வணக்க வேண்டும்

4. மகா கணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபடவேண்டும்.



மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அன்பார்ந்த மீன ராசிக்காரர்கள் மூன்றாம் இடம் ராகுவிற்கு ஏற்ற இடத்திலும் 9ல் கேதுவும், இன்னும் ஓரிரு மாதங்களில் சனியும் குருவுடன் சேர்ந்து 11ல் சஞ்சரிக்கும் காலம் என்ன பலன் என்று பார்ப்போம்.
மனதில் ஒருவித தெய்வ பயத்தோடு செயல்படும் நீங்கள் இந்த பெயர்ச்சி மீன ராசிக்கு ஒருவித நற்பலன்கள் கிட்டும்.

3ம் வீட்டில் ராகுவும் அவரின் பார்வை சனி உடன் சேர்ந்து ராசியை பார்க்கும்பொழுது ஜாதகர் தன்னுடைய முழு முயற்சி கொண்டு கடின உழைப்பை மூலதனமாக கொண்டு உயர்வீர்.

9இல் கேது தந்தைக்கு ஆபத்து அல்லது ஒரு சில வாங்குவதை பிரச்சனை ஏற்படும் . அதனால் முடிந்தவரை பெற்றோரிடம் அமைதி காக்கவும்

சந்திரன் ராகு என்பதால் பெண்ணாக இருந்தால் வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்படும். மற்றும் தாய் வழி சார்ந்த சொத்து உங்களுக்கு பிராப்தம் இருந்தால் உங்களை வந்து சேரும்

ஒரு சிலருக்கு நீண்ட நாளாக இருந்த குழந்தை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்டும். தத்து குழந்தை தேடியவர்கள் நீங்கள் நினைத்தமாதிரி குழந்தை உங்களை வந்து சேரும்

ராகு சந்திரனை பார்ப்பது என்பது ஒரு வித மனம் சார்ந்த பிரச்சனை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புகள் வேலைகள், படிப்பு சம்பந்தமாக அடுத்த வருடம் துவங்கும்

5ம் இடத்தை ராகு பார்வை படுவதால் காதலில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படும். திருமணம் ஆனவர்கள் மற்ற விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்

உங்களின் குரு நவம்பர் மேல் மகரத்தில் சனி உடன் சேர்ந்து குருவின் பார்வை ராகு மேல் படும்போது மீன ராசி லக்கினம் கொண்டவர்கள் யோகத்தை அடைவார்.

பிஸ்னஸில் ஒரு விரிவான மாற்றம் அதிர்ஷ்டம் கிட்டும்.

பரிகாரம்

1. குலதெய்வம், திருச்செந்தூர் வழிபாடு அவசியம்

2. குரு நீச்சம் ஆவதால் நீங்கள் குருவான மகான்கள் பிராத்தனை செய்ய வேண்டும். குருவை activate பண்ணவேண்டும்

3. தசா புத்திக்கு ஏற்ற பரிகாரம் மற்றும் ஆன்மீக பிரயாணம் செய்யவேண்டும்.

4. புன்னை மரம் கொண்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது முக்கியம். இந்த புன்னை மரத்தை கோவிலில் நடலாம்.

குருவே சரணம்

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647

Email: vaideeshwra2013@gmail.com

பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை(01.09.2020) முதல் மாணவர் சேர்க்கை!

பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை(01.09.2020) முதல் மாணவர் சேர்க்கை!









 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிநகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில்விண்ணப்பித்த மாணவர்கள்பலருக்கும் இடம் கிடைக்காததால், கூடுதலாக 200 இடங்கள்அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைமுதல் மாணவர்கள் சேர்க்கைநடக்கிறது.
காரைக்குடி ராமநாதன் செட்டியார்நகராட்சி பள்ளி 2013-2014-ம்கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது 6 ஆசிரியர்களும், 218 மாணவர்களும் இருந்தனர். தலைமைஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா முயற்சியால்தனியார் பள்ளிகளைப் போன்றுசீருடை, டை, ஷூ அணியும் முறைஇங்கு கொண்டு வரப்பட்டது. இதுபெற்றோரிடம் நல்ல வரவேற்பைபெற்றது.

2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கிலவழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம்உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம்வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீததேர்ச்சியை இப்பள்ளி பெற்றுவருகிறது. இதனால் மாணவர்எண்ணிக்கையும் படிப் படியாகஉயர்ந்தது.

கடந்த ஆண்டே 1,325 மாணவர்கள்படித்தனர். கரோனா ஊரடங்கால்நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்சேர்க்கை ஆக.17-ம் தேதி நடந்தது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு 700 பேர் இடம் கேட்டு குவிந்தனர்.

இதனால் சில மணி நேரத்திலேயேமாணவர்கள் சேர்க்கை முடிந்ததால், பலரும் தங்களது குழந்தைகளுக்குஇடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன்திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து 6-ம் வகுப்பில் கூடுதலாக200 மாணவர்களை சேர்க்கவும், கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டவும் கல்வித்துறைஉத்தரவிட்டது. மேலும் இன்று முதல்அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைநடக்கிறது.








🅱️REAKING NEWS 🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் ( 31.08.2020 ) இன்று மட்டும் 5,956 பேர் பாதிப்பு

🅱️REAKING NEWS 🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் ( 31.08.2020 ) இன்று மட்டும் 5,956 பேர் பாதிப்பு




ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா


கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாகநிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்தபின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால்கவனம் செலுத்த முடியும் என்கின்றனர்கல்வியாளர்கள்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மே மாதஇறுதியில், பொதுமாறுதல் கலந்தாய்வுநடத்துவது வழக்கம்.ஜூன் இறுதிக்குள், பதவிஉயர்வு, பணியிட மாறுதல் பெற்றவர்கள், அந்தந்த புதிய பள்ளிகளுக்கு சென்றுபணியில் சேர வேண்டும்

ஊரடங்கு காரணமாக பள்ளிகள்மூடப்பட்டுள்ள இச்சூழலில், வரும் செப்., இறுதி வரை, மாணவர் சேர்க்கை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கலந்தாய்வுநடத்துவது குறித்து எந்த அறிவிப்பும்வெளியிடப்படவில்லை.

மத்வராயபுரம், தொண்டாமுத்துார் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, குறிச்சி, தடாகம் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கிணறு உட்பட, 20க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல், பாடவாரியாக, 35 முதுகலைபட்டதாரி ஆசிரியர் இடங்களும் காலியாகஉள்ளன.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமாநில தணிக்கையாளர் அருளானந்தம்கூறியதாவது:மே மாதத்துக்கு பின், பணிஓய்வு பெற்றவர்களுக்கே, ஓராண்டு நீட்டித்துபணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெற்றதலைமையாசிரியர், முதுகலை பட்டதாரிஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், சமீபத்தில்தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுகலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாகநடத்தப்பட்டது. அது போல், பிறமாவட்டங்களிலும், பதவி உயர்வு கலந்தாய்வுநடத்தலாம். பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல்பணிகளில் மட்டும், ஆசிரியர்கள் கவனம்செலுத்த,

இது வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கூறினார்.ஆன்லைன் வாயிலாக, சமூகஇடைவெளியை பின்பற்றி, பதவிஉயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவதுநடத்த வேண்டும்;

முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர்காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றிநடக்கும் என்கின்றனர்ஆசிரியர்கள்.கவனத்தில் கொள்ளுமா, நம்பள்ளிக்கல்வித்துறை?''சென்னைமாநகராட்சி சார்பில், சமீபத்தில்தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுகலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாகநடத்தப்பட்டது.

அது போல், பிற மாவட்டங்களிலும், பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தலாம்.

 பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல் பணிகளில்மட்டும், ஆசிரியர்கள் கவனம் செலுத்த, இதுவசதியாக இருக்கும்,''ஆன்லைன் வாயிலாக, சமூக இடைவெளியை பின்பற்றி, பதவிஉயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவதுநடத்த வேண்டும்;

 முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர்காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

பள்ளிக்கு வராத ஆசிரியா்கள் மீது நடவடிக்கை. கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கு வராத ஆசிரியா்கள் மீது நடவடிக்கை. கல்வித்துறை எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோக்கை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு வராத ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மாணவா்கள் சோக்கை தொடங்கியுள்ள போதிலும் பல அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் வருவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது. அதையொட்டி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு தினமும் வருகை தந்து மாணவா் சோக்கையை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அருகில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ஆசிரியா்கள் நேரடியாகச் சென்று, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றோா்களிடம் எடுத்துக் கூறி தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்கு மாணவா் சோக்கை தொடங்கிவிட்ட போதிலும் ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து விழுப்புரம், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஆசிரியா்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வட்டார கல்வி அலுவலா்கள் தங்கள் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் தினமும் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா். மேலும், பள்ளிக்கு வராத ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

DTEd Teacher Training பயில ஆர்வம் காட்டாத மாணவர்கள் - வெறிச்சோடி காணப்படும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்

DTEd Teacher Training பயில ஆர்வம் காட்டாத மாணவர்கள் - வெறிச்சோடி காணப்படும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்

IGNOU No Evaluation Needed - GO Download

IGNOU No Evaluation Needed - GO Download

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்பல்கலைக்கழகம் வழங்கப்படும் பி.எட் பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர் நேரடி பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக அங்கீகரித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.. 

 

Inspire Award - 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 5 மாணவ/மாணவிகள் வரை விண்ணப்பிக்கலாம் ....விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ...(முழு விவரம்)

Inspire Award - 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 5 மாணவ/மாணவிகள் வரை விண்ணப்பிக்கலாம் ....விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ...(முழு விவரம்)
இன்ஸ்பையர் அவார்டு குறித்து ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற (Webex Meet) நிகழ்நிலை கூட்டத்தில் கூறப்பட்ட  தகவல்கள்.
 பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை 2008 முதல் இன்ஸ்பையர் விருது வழங்கி வருகிறது.
 2016 முதல் இந்த விருது புத்தாக்க அறிவியல் ஆய்வு (மானக்) என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் இன்ஸ்பயர்  மானக் விருதுக்கு பதிவுகள் துவங்கிவிட்டது. கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக கூறப்பட்டுள்ளது
  இந்தமுறை 5 மாணவ /  மாணவிகளின் பெயரை பதிவு செய்யலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள எந்த வகுப்பில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஐந்து மாணவர்களின் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வகுப்பில் இத்தனை மாணவர்கள்தான் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு மாணவனின் படைப்பும் தனித்தனியாக இருத்தல் அவசியம்
    2 (அ) 3 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு படைப்பை தர அனுமதி இல்லை. குழு செயல்பாடு இல்லை. அவ்வாறு ஒரே கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொடுத்து பதிவு செய்தால் உங்கள் பதிவு நிராகரிக்கப்படும்
      இந்த முறையும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு தலா பத்தாயிரம் (10000/_) ரூபாய் வழங்கப்படும்.கடந்த காலங்களில் விண்ணப்பிக்கும்  அனைவரும் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொகை கொடுக்கப்பட்டது.   ஆனால் , இந்த முறை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்படும்.
அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலும், தேசிய அளவிலும், கண்காட்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் படைப்புகள் தொழில் முனைவோரின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இது தொடர்பாக  மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று தன் படைப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் ஜப்பான் நாட்டிற்கு நமது மாணவர்கள் சென்று வந்துள்ளனர்.
இன்ஸ்பயர் அவார்டு க்கு படைப்புகளைத் தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
Novelty -  புதுமையான படைப்புகள்
👉 Social applicability -  சமுதாயத்திற்கு பயன்படும் விதமாக, பொருந்தும் விதமாக இருத்தல்
👉 Competitive advantages over existing technologies -  தற்சமயம் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்
👉 Cost effectiveness -  குறைந்த செலவில் தயாரான படைப்புகள்
👉 User friendliness -  கையாள்வதற்கு எளிமையாக இருத்தல்
👉  Any other speciality வேறு ஏதும் சிறப்பு அம்சங்கள் உடைய படைப்புகள் தவிர்க்கவேண்டிய படைப்புகள்
👉 மழைநீர் சேகரிப்பு
👉 சூரிய மண்டலம், கோள்கள், பூமியின் இயக்கம்
👉 எரிமலை, மண்சரிவு, நிலநடுக்கம்
👉 மின்சாரம் தயாரித்தல். (காற்றாலை மூலமாக சூரிய சக்தி மூலமாக)
👉 பல்வேறு வகை  அலாரங்கள்
👉  மண்புழு உரம் தயாரித்தல்
👉 Vaccum cleaner
 👉Hydraulic lift
👉 Sensor  தொடர்பான படைப்புகள்
 👉 உணவு மாசுபாடு
 👉 ஒளிச்சேர்க்கை, மிருகக்காட்சிசாலை மாதிரிகள், மூலிகைத்தோட்டம், உணவு சங்கிலி, கார்பன், நீர் சுழற்சி
👉 கட்டுரைகள்
👉 தானியங்கி தெருவிளக்குகள்
👉 மனித உறுப்பு மாதிரிகள்
 👉 நீர் சுத்திகரிப்பு, தானியங்கி நீர் ஏற்றுதல்
    மேற்கூறிய தலைப்புகளில் உள்ள படைப்புகள்  இருப்பதை தவிர்க்கலாம். இருந்தால் நிராகரிக்க படுவீர்கள்.
🌷 முக்கிய குறிப்புகள் 🌷
பதிவு செய்யும்போது U Dise code பயன்படுத்தவும்
   5 படைப்புகள்/ 5 மாணவர்கள்
  ஒரு மாணவனின் படைப்பு மற்ற மாணவனுக்கு பயன்படுத்தவோ, பதிவு செய்யவும் கூடாது
    சென்ற வருடம் பயன்படுத்திய படைப்புகளை பயன்படுத்தக்கூடாது
  பதிவு செய்யும்போது audio / video வாக பதிவு  செய்யலாம்
 பதிவு செய்யும் மொழியை தேர்வு செய்து கொள்ளவும்
 மாணவனின் வங்கிக்கணக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருத்தல் அவசியம். மேலும் வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்த்து பதிவு செய்யவும், மாணவனின் பெயர் வங்கி கணக்கு (passbook) புத்தகத்தில் உள்ளது போல் பதிவு செய்தல் மிகவும் அவசியமானதும் முக்கியம் வாய்ந்ததாகும்
  கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தங்களின்  username,password ஐ பயன்படுத்தி பதிவு செய்யவும்.
பள்ளிகள் திறந்த பிறகு இன்ஸ்பையர் அவார்டு மாணவர்களை தேர்வு செய்யக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
யோசனை போட்டி நடத்துதல்
  குழுக்களாக மாணவர்களை பிரித்து எதைப்பற்றி படைப்புகள் செய்யலாம் என்ற யோசனை கேட்கவும்
அப்படிப் பெறப்பட்ட யோசனைகளில் புதுமையான ஒரு கருவி , ஏற்கனவே உள்ள  கருவியில்  ஒரு மேம்பாடு செய்தல், நிகழ்காலத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையும் யோசனைகளை தேர்வு செய்யவும்
அனைத்து யோசனைகளையும் சேகரித்த பின்பு தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்
கருத்துப்பெட்டி என்ற ஒரு பெட்டியை பள்ளியில் வைத்து மாணவனின் படைப்பு  சார்ந்த யோசனையை அதில் எழுதி போட சொல்லவும்
அன்றாடம் சுற்றுப் புறத்தில் நிகழும் நிகழ்வுகளை உற்றுப் பார்த்து கவனித்து பிரச்சனைகளை கண்டுபிடிக்க கூறவும்
பிறகு அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க சொல்லவும் இதனால் அருமையான  படைப்புகள் உருவாகும்

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம்: தகவல் திரட்டுகிறது மத்திய அரசு

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம்: தகவல் திரட்டுகிறது மத்திய அரசு
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வகுப்பறை எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், 'யூ~டைஸ்' படிவத்தில் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில பள்ளிக்கல்வி தகவல்கள், சேகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்படுகின்றன.

மாவட்ட வாரியாக, 'யூ~டைஸ்' எனும், மாவட்ட கல்வி தகவல் தொகுப்பு படிவத்தின் மூலம், ஆண்டுதோறும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும், கட்டமைப்பு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர், மாணவர்கள் விகிதம், அலுவலக பணியாளர்கள் எண்ணிக்கை என, பல்வேறு தலைப்புகளின் கீழ், கிட்டத்தட்ட, 150க்கும் மேற்பட்ட கேள்விகள், இப்படிவத்தில் இடம்பெற்றுள்ளன.

அரசுப்பள்ளிகளுக்கு கல்விசார் நிதி, இத்தகவல் அடிப்படையில் ஒதுக்கப்படும்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எமிஸ் எண் உள்ளது.

இத்தகவல்களை, யூ~டைஸ் படிவத்தில் இணைத்து, அனைத்து வகை தகவல்களையும் புதுப்பிப்பது வழக்கம். இப்படிவத்தை, ஆசிரியர் பயிற்றுநர்கள் சரிபார்த்த பிறகு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு, இணையதளத்தில் பதிவேற்றுவர்' என்றனர்.

திரும்பும் இயல்பு நிலை?- லாக்டவுனுக்கு பின் ஊழியர்களின் பிஎப் தொகையை செலுத்திய 1,50,000 நிறுவனங்கள் :

திரும்பும் இயல்பு நிலை?- லாக்டவுனுக்கு பின் ஊழியர்களின் பிஎப் தொகையை செலுத்திய 1,50,000 நிறுவனங்கள் :
டெல்லி: கொரோனா லாக்டவுனில் இருந்து நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. சுமார் 1,50,000 நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான பி.எப். சந்தா தொகையை மீண்டும் செலுத்த தொடங்கிவிட்டன.
நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி புரிய ஏற்பாடுகள் செய்திருந்தன.
லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கான பி.எப். சந்தா தொகையையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையையும் 3 மாதங்களுக்கு அரசு ஏற்றுக் கொண்டது. தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 1,50,000 நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக பி.எப். சந்தா தொகையை செலுத்த தொடங்கியிருக்கின்றன. இருந்தபோதும் பிப்ரவரி மாதம் சந்தா செலுத்திய 64,000 நிறுவனங்கள் இன்னமும் புதிய பி.எப் சந்தாக்களை செலுத்தவில்லை.
மசாலா தோசை சுட்ட கமலா ஹாரீஸ்.. பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்.. வைரலாகும் பழைய வீடியோ
அரசின் ஓய்வூதிய நிதி திட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் சுமார் 5,50,000 நிறுவனங்கள் இணைந்திருந்தன. இது ஏப்ரல் மாதத்தில் 3,32,700 ஆக குறைந்தது. ஏப்ரல் இறுதியில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் இருந்த 80 லட்சம் ஊழியர்களின் பி.எப்..சந்தா தொகை செலுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 3.84 கோடியாக இருந்த பி.எப். சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஜூலை இறுதியில் 4.62 கோடியாக அதிகரித்திருக்கிறது என்கின்றன அரசின் புள்ளி விவரங்கள்.
source: oneindia.com

IFHRMS - இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் தாமதமாகும் ?

IFHRMS - இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் தாமதமாகும் ?


இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு நிதி மேலாண்மை திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊதிய பட்டியல் தயாரிப்பதற்கு, ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் இணையதள தொடர்பு  சரிவர கிடைப்பதில்லை.

அப்படியே கிடைத்தாலும், தொடர்பு சிறிதுநேரத்தில் துண்டிக்கப்படுகிறது. இதனால் தயாரித்த ஊதியப்பட்டியல் விபரங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. மீண்டும் தொடர்பு கிடைத்தாலும் ஆரம்பம் முதல் மீண்டும் ஊதியப்பட்டியல் தயாரிக்க வேண்டிய நிலை உருவாகிறது. ஊதியப்பட்டியல் தயாரித்து பட்டியல் எண் கிடைப்பதற்கு 5 மணிநேரம் ஆவதால், பட்டியல் எண் கிடைத்த பிறகே அடுத்தக்கட்ட வேலையை தொடர முடிகிறது. ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் பற்றி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கவில்லை. வாய்மொழி வகுப்பாகவே நடத்தி உள்ளனர்.

ஊதிய பிடித்தங்கள் செய்வதில் பிரச்னைகள் இருப்பதால் குறைபாடுகளை சரி செய்த பிறகு, ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் திட்டத்தில் ஊதியம் மற்றும் இதர பட்டியல் தயாரிக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தில் உள்ள குளறுபடியால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்றும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்கும் கொரோனா- காரணம் தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்கும் கொரோனா- காரணம் தெரியுமா?
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்கும் கொரோனா
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.

இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.

சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4 நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத் தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Breaking Now : தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 27 ) மேலும் 5,981 பேருக்கு கொரோனா தொற்று

Breaking Now : தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 27 ) மேலும் 5,981 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 27.08.2020 ) இன்று 5,981 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  4,03,242 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1,286   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 

செங்கல்பட்டு - 

திருவள்ளூர் - 


மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.08.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,870


இன்றைய உயிரிழப்பு : 109

வகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்.

வகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்.

தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் வகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்...

என்னது ஒரு வருடமாக 2000 ரூபாய் நோட்டே அச்சடிக்கப்படவில்லையா? - அதிர்ச்சி தகவல்!

என்னது ஒரு வருடமாக 2000 ரூபாய் நோட்டே அச்சடிக்கப்படவில்லையா? - அதிர்ச்சி தகவல்!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகள் 2019- 2020 ஆம் ஆண்டு காலத்தில் அச்சடிக்கப்படவே இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் 2016- 2017 ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் இருந்து அந்த நோட்டின் பணப்புழக்கம் கணிசமாக குறைந்துகொண்டே வந்தது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ஏடிஎம்களில் இனி 2000 நோட்டு கிடைக்காது என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது 2019-2020ம் ஆண்டில் ரூ2,000 நோட்டு ஒன்றுகூட அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பணப்புழக்கம் குறைந்ததுதான் என சொல்லப்படுகிறது. ஆனால் ரூ500, ரூ100 நோட்டுகளின் புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன.

NEET தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்.

NEET தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்.
நீட் தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.
 
நீட் தேர்வுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும்.நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தல்.

கருணை அடிப்படையில் அரசு வேலையில் சேர்பவர் குடும்பத்தைக் கவனிக்காவிட்டால் வேறு உறுப்பினருக்கு அந்த வேலை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

கருணை அடிப்படையில் அரசு வேலையில் சேர்பவர் குடும்பத்தைக் கவனிக்காவிட்டால் வேறு உறுப்பினருக்கு அந்த வேலை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

அரசு ஊழியர் உயிரிழப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தகுதி அடிப்படையில் அரசுக்கு வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தால் அதே குடும்பத்தில் மற்றொருவருக்கு கருணை வேலை வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலூர் தாலுகா கட்சிராயன்பட்டியில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்தவர் வி.கல்லாணை. இவர் 28.10.211-ல் இறந்தார். கல்லாணையின் மகள் இளையராணி கருணை வேலை கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 27.8.2012-ல் மனு அளித்தார்.

இதனிடையே கல்லாணையின் மகன் சக்திபொன்னுசாமிக்கு 2013-ல் தகுதி அடிப்படையில் அரசு வேலை கிடைத்தது. இதையே காரணமாக சொல்லி கருணை வேலை கேட்டு இளையராணி அனுப்பிய மனுவை நிராகரித்து மதுரை மாவட்ட ஆட்சியர் 17.3.2020-ல் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவில், பணியிலிருக்கும் அரசு ஊழியர் உயிரிழப்பதற்கு முன்பு அவரது குடும்பத்தில் யாரோனும் ஒருவர் அரசு வேலையில் சேர்ந்து, அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்தால், குடும்பத்தின் வேறு ஒருவருக்கு கருணை வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அரசாணை உள்ளது.

ஆனால் இங்கு அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்தில் ஒருவர் அரசு வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் அந்த அரசாணை அடிப்படையில் மனுதாரருக்கு கருணை வேலை வழங்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு கருணை வேலை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி இளையராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மனுதாரரின் தந்தை பணியின் போது உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவர் குடும்பத்தில் ஒருவர் தகுதி அடிப்படையில் அரசு வேலைக்கு சென்றுள்ளார்.

அரசு ஊழியரின் இறப்புக்கு முன்பு குடும்பத்தில் ஒருவர் அரசு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்காமல் இருந்தால், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு கருணை வேலை வழங்க பரிசீலிப்பதாகவும், இறப்புக்கு பின்பு குடும்பத்தில் ஒருவர் அரசு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தால் கருணை வேலை வழங்க முடியாது என்பதும் முரண்பாடாக உள்ளது.

இதில் மனுதாரரின் சகோதரர் அவரது தந்தை இறப்புக்கு பிறகு அரசு பணிக்கு சென்றாலும் குடும்பத்தை கவனிக்கவில்லை. தனியே சென்றுவிட்டார். இதை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அப்படியிருக்கும் போது மனுதாரருக்கு கருணை வேலை வழங்க மறுக்கக்கூடாது.

எனவே மனுதாரருக்கு கருணை வேலை வழங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ப உரிய வேலை வழங்க 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

NEET 2020 - EXAM HALL TICKET PUBLISHED DIRECT LINK


செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை






நாட்டில் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டப்படி தேர்வு நடத்த ஏற்பாடு செய்து ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டு மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.



நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.neet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



தமிழகத்தில் இருந்து 2020ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 13% குறைந்தது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு தேசிய அளவில் கூடுதலாக 74,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 13% அதாவது சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் குறைவாகும். அதே நேரத்தில், பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

D.T.Ed முடித்தவர்களுக்கு வேலை இல்லை - 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

D.T.Ed முடித்தவர்களுக்கு வேலை இல்லை - 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்.
ஆசிரியர் பட்டய பயிற்சி (D.T.Ed) முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு 12 ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றால் போதுமானது.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் மிகவும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டில் 478 ஆக இருந்த அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 2017ல் 360 ஆக குறைந்தது. இரண்டே ஆண்டுகளில் 118 நிறுவனங்கள் மூடப்பட்டது.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் மிகவும் குறைந்து வருவதே இதற்கான காரணம்.

மேலும் தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தரவின் அடிப்படையில் 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்கு குறைவாக இருக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 62 அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8 ம் வகுப்பு வரையிலும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு வருவதும் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சரிந்து வரும் மாணவர் சேர்க்கையும் தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளதாலும் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது.

மேலும் மத்திய அரசின் குழந்தைகளுக்கான இலவச கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட காரணமாக அமைந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை 5.70 லட்சத்தை தாண்டியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை 5.70 லட்சத்தை தாண்டியுள்ளது.
கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்துவித பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ஆக. 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது.

அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்புகளில் இதுவரை 5.70 லட்சத்துக்கும் (நேற்றைய நிலவரப்படி) அதிகமான மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் கால அவகாசம் இருப்பதால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்கள் வரை கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SGT Basic Pay - RTI –இறுதிநிலை ஊதியமான ரூ.65500/- ஐ அடைந்து விட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது கடிதம்!


RTI –இறுதிநிலை ஊதியமான ரூ.65500/- ஐ அடைந்து விட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது  கடிதம்!


 அ ஜெயபபிரகாஷ். த/பெ அழகேசன். சடையம்பட்டி (கிராமம்), பொய்யப்பட்டி (அஞ்சல்),அரூர் (வட்டம்), தருமபுரி (மாவட்டம் தகவல் அறியும் கரிமைச் சட்டம் 2006-ன்  பெறப்பட்ட மனு - தகவல் அளித்தல்
இடைநிலை ஆசிரியர்களின் இறுதிநிலை ஊதியமான  ரூ.65500/- ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு  உயர்வை நிறுத்து வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலம் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான  ரூ 65500/- ஐ அடைநது விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துகள் அரசின் பரிசிலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு எப்எம்ஜி தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் பிரச்சினை: சொந்த ஊருக்கு மாற்ற கோரிக்கை:




தமிழகத்தில் இருந்து எப்எம்ஜிதேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்கும்படி கேட்டுக்கொண்ட பின்னரும், தமிழக மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகாவில் மையங்களை ஒதுக்கி, இப்பிரச்சினையை தேசிய தேர்வு வாரியம் மேலும் குழப்பமாக்கி உள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாகப் பணியாற்ற, ‘Foreign Medical Graduate Examination’ (எப்எம்ஜிஇ) தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்தியமருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில், மருத்துவர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும்.
ஆண்டுக்கு 2 முறை ஆன்லைனில் நடக்கும் இத்தேர்வு வரும் 31-ம் தேதி நடக்க உள்ளது.

தற்போது கரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இல்லை. அதனால்,தேர்வு மையங்கள் அவரவர் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதுதொடர்பாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழியாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இக்கோரிக்கையை வைத்தனர்.
ஆனால், நேற்று தமிழக மாணவர்கள் பலருக்கு பிற மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டு ஹால் டிக்கெட்களும் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கள்கிழமை. அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களைப் பெற்றவர்கள், சனிக்கிழமையே தங்கள் ஊரில் இருந்து புறப்பட வேண்டும். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து இல்லாத சூழல், விடுதிகள் இயங்காத நிலையில், 2 நாட்களுக்கு முன்பே சென்று வெளியூர்களில் தங்கவும் முடியாது.
இதுபோன்ற சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட தேசிய தேர்வு வாரியம், தேர்வு மையங்களை மாற்றி ஹால் டிக்கெட் வழங்கலாம். மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இதில் தலையிட்டு விரைவாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Go No :125 Date :26.08.2020 No Semester Exam Go In Higher Education



உயர்கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 26.08.2020 - கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.அரசாணை டி) எண். 125 நாள்: 26.08.2020.

Go No :125 Date :26.08.2020 No Semester Exam  Download 


1. அரசாணை டி) எண்.94, உயர்கல்வித் (கே2) துறை, நாள் 04.07.2020.
2. அரசாணை டி) எண். 111, உயர்கல்வித் (கே2) துறை, நாள் 27.07.2020.
3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள் 26.08.2020.
கொரோனா நோய் தொற்று காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிமுறைகளின்படி, பருவத் தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை வகுப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஒன்றினை அமைத்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டன.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்பட்டன:
 “கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த பருவத்திற்கு மட்டும் பல்கலைக்கழக நிதி  குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அளித்துள்ள 
 வழிகாட்டுதலின்படி கீழ்க்கண்ட மாணாக்கர்கள் தேர்வு எழுவதிலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டிற்குச் செல்ல அரசு அனுமதி அளிக்கிறது.

* முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்கள்,

* முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்,

; * இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
 ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்

* முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்

* அதேபோன்று எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்” அவ்வரசாணையில் மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது மாணாக்கர்களின் கோரிக்கையை எற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 26.08.2020 அன்று பின்வரும் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள் :-

“இறுதி பருவ தேர்வுகளைத் தவிர, பிற பருவ பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். '”

 இறுதி பருவ தேர்வுகளைத் தவிர, பிற பருவ பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு  மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

5. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் உள்ள வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என அரசானையில் குறிப்பிடபட்டுள்ளது 



Recent Posts

Total Pageviews

Blog Archive