பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை நாளை முதல் துவக்கம்
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின் போது பள்ளிகள் இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டுமென பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் சுற்றறிக்கை:அனைத்து மேல்நிலை பள்ளியிலும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை 24ல் துவங்குகிறது.
பத்தாம் வகுப்பில் அதே பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மதிப்பெண் காரணம் காட்டி எக்காரணம் கொண்டும் சேர்க்கை மறுக்க கூடாது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்து பள்ளிகளிலும் இடஒதுக்கீடு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
பொதுப்பிரிவுக்கு, 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர், 26.5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 20, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், 3.5, ஆதிதிராவிடர், 18, பழங்குடியினர், 1 சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்றார்
0 Comments:
Post a Comment