பிழைகளுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

 பிழைகளுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழில் உள்ள மாணவரின் பெயர் பிழையுடன் இருப்பதால் 10-ம் வகுப்பு மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.


கரோனாவால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு ஆக.10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


நேற்று முதல் ஆக. 21-ம் தேதி வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந் தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண்களில் குறைவு இருப்பதாக மாண வர்கள் கருதினால் குறைதீர் விண்ணப் பங்களை ஆக. 25 வரை தலைமை ஆசிரியர் களிடம் மாணவர்கள் அளிக்கலாம் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று பள்ளிகளில் ஆன் லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பலரது சான்றிதழ்களில் அவர்களது பெயர்கள் தமிழில் பிழையாக இருந்தன.


இதனால், பெயர்களை பேனாவில் எழுதி தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ்களை வழங்கினர். இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் மீதான நம்பகத் தன்மையில் சந்தேகம் ஏற்படும் என்பதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.


எனவே, பிழையைச் சரிசெய்து அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணினியில் தட்டச்சு செய்யும்போது ஏற்பட்ட தவறால் பெயரில் பிழை உள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்," என்றார்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive