திரும்பும் இயல்பு நிலை?- லாக்டவுனுக்கு பின் ஊழியர்களின் பிஎப் தொகையை செலுத்திய 1,50,000 நிறுவனங்கள் :

டெல்லி: கொரோனா லாக்டவுனில் இருந்து நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. சுமார் 1,50,000 நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான பி.எப். சந்தா தொகையை மீண்டும் செலுத்த தொடங்கிவிட்டன.
நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி புரிய ஏற்பாடுகள் செய்திருந்தன.
லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கான பி.எப். சந்தா தொகையையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையையும் 3 மாதங்களுக்கு அரசு ஏற்றுக் கொண்டது. தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 1,50,000 நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக பி.எப். சந்தா தொகையை செலுத்த தொடங்கியிருக்கின்றன. இருந்தபோதும் பிப்ரவரி மாதம் சந்தா செலுத்திய 64,000 நிறுவனங்கள் இன்னமும் புதிய பி.எப் சந்தாக்களை செலுத்தவில்லை.
மசாலா தோசை சுட்ட கமலா ஹாரீஸ்.. பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்.. வைரலாகும் பழைய வீடியோ
அரசின் ஓய்வூதிய நிதி திட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் சுமார் 5,50,000 நிறுவனங்கள் இணைந்திருந்தன. இது ஏப்ரல் மாதத்தில் 3,32,700 ஆக குறைந்தது. ஏப்ரல் இறுதியில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் இருந்த 80 லட்சம் ஊழியர்களின் பி.எப்..சந்தா தொகை செலுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 3.84 கோடியாக இருந்த பி.எப். சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஜூலை இறுதியில் 4.62 கோடியாக அதிகரித்திருக்கிறது என்கின்றன அரசின் புள்ளி விவரங்கள்.
source: oneindia.com
0 Comments:
Post a Comment