அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை 5.70 லட்சத்தை தாண்டியுள்ளது.
கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்துவித பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ஆக. 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்புகளில் இதுவரை 5.70 லட்சத்துக்கும் (நேற்றைய நிலவரப்படி) அதிகமான மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் கால அவகாசம் இருப்பதால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்கள் வரை கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment