இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்!
இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது.
இளநரை மற்றும் முதுமையில் வரும் நரையை கூட கருமையாக மாற்றி முடி வளர கூடிய ஒரு அருமையான முறையை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. வெந்தயம் 2 ஸ்பூன்
2. மிளகு அரை ஸ்பூன்
3. கருஞ்சீரகம் 2 ஸ்பூன்
4. நெல்லிக்காய் பவுடர்
5. கருவேப்பிலை பவுடர்
செய்முறை:
1.முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து வெந்தயம், மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் லேசான தீயில் வறுத்து கொள்ளவும். கடாய் அல்லது மண் சட்டி பயன்படுத்தலாம். தவா வேண்டாம்.

2. ஆற வைத்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
3. பின் அதே வாணலியில் சிறிது நெல்லிக்காய் பவுடர் மற்றும் கறிவேப்பிலை பவுடர் சேர்த்து வறுக்க வேண்டும். அதன் வண்ணம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதிகமாக தீய்ந்து போகாமல் மிதமான தீயில் நன்கு வறுக்க வேண்டும்.
4. இப்பொழுது 100 மில்லி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடி செய்து வைத்திருந்த வெந்தயம்,மிளகு, கருஞ்சீரகம் பொடியை அதில் போடவும்.
5. அதன்பின் நாம் தயார் செய்த நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை கலவையை அதில் போட்டு கலந்து விடவும்.5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
6. இது நன்கு ஆற வேண்டும். இரவு முழுவதும் வைத்து இருந்தால் மிகவும் நல்லது.

7. இரவு முழுவதும் அந்த எண்ணெய்யை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலையில் ஒரு வடிகட்டி அல்லது நல்ல துணி கொண்டு அதை வடிகட்டிக் கொள்ளவும்.
இதை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம் அல்லது இரவில் நன்கு மயிர்க்கால்களில் படும்படி எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு கொண்டு தலையை கழுவி விடலாம்.
இதை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது இளநரை கருமையாக மாறும். முதுநரை இப்பொழுது தான் ஆரம்பிக்கப் போகிறது என்றால் அந்த
முதுநரையை தள்ளிப்போடும் தன்மை இந்த எண்ணெய்க்கு உள்ளது.
இதை வாரத்தில் மூன்று நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் முடி கருமையாக வளரவதை கண்கூடாக காணலாம்