சர்க்கரை அளவு சீராக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! தொப்பையும் குறைந்துவிடும்!
தொப்பை அதிகமாக இருக்கிறது என்று கவலைப் படாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் அதிகமாக தொப்பை போடும். அதேபோல் அவர்களுக்கு சீக்கிரமாகவே சர்க்கரை வியாதிகள் போன்றவை வந்து விடும். இதனை சரிசெய்ய ஒரு ஸ்பூன் நீங்கள் இதை சாப்பிட்டால் போதும். இன்சுலின் அளவை அதிகரித்து உங்களது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடல் மெலிய செய்யும். தேவையான பொருள்: 1. கொத்தமல்லி விதைகள் கொத்தமல்லி விதைகள் இதனுடைய பயன்கள் எண்ணற்றவை. எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். பயன்படுத்தும் முறை:
1. முதலில் ஒரு ஸ்பூன் மல்லி விதைகளை எடுத்து ஒரு டம்ளரில் போட்டு நன்கு சூடான தண்ணீரை ஊற்றி அதனை மூடி வைக்கவும். 2. இதனை நாம் காலையில் குடிக்க வேண்டும் என்பதால் இரவு முழுவதும் இது ஊற வேண்டும். 3. காலையில் வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். அப்படி குடிக்கும் பொழுது நமக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரையை குறைக்கிறது. 4. இரவு முழுவதும் ஊற வைத்த இந்த தண்ணீரை காலையில் பார்க்கும் போது ஒருவித மஞ்சள் நிறத்துடன் காட்சியளிக்கும்.இதனை நீங்கள் வடிகட்டி விட்டு அப்படியே பருகலாம். இதில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை நல்ல ருசியாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள் தாராளமாக இதனை பருகலாம். 3 மாதத்திற்கு பிறகு இதனை பயன்படுத்தி வந்தால் தொப்பை குறையும் மற்றும் பால் சுரக்கும்.