மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.


ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.


ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில், கொரோனா பதற்றம் பயம் இருக்கத்தான் செய்யும் என்று மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.


பள்ளிகளில் சமூக இடைவெளி என்பது மாணவர்களில் மனநிலையை பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு பள்ளிகள் எப்போது திறப்பது என்பது பற்றி இந்திய நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழநாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive