மனதை அமைதிப்படுத்தும் பிரியாணி இலை

 

இக்காலத்தில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் இரவில் தூக்கத்தை இழந்து மனதில் அமைதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இப்படி தேவையில்லாத மன அமைதி இல்லாமல் இருக்கும் போது நாம் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விடுவோம். அதனால் உங்கள் மன அமைதியை படுத்துவதற்கு இயற்கையிலேயே ஒரு சுலபமான வழியை அக்காலத்து முன்னோர்கள் பின்பற்றி உள்ளார்கள். அந்த வழியை நாம் இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

நம் வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் பிரியாணி இலை. இந்த பிரியாணி இலையை உணவுக்கு சுவை மற்றும் நறுமணத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது. அதனை சமையலுக்கு மட்டுமன்றி மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பயன்படுத்தலாம். வீட்டிலுள்ள காற்றை சுத்திகரித்து சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு இதை நாம் பயன்படுத்தலாம். அதில் ஏராளமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு நன்மை பயக்கும்.உலர்ந்த பிரியாணி இலையை எரிக்கும் போது அதிலிருந்து வரும் புகையை ஆரோக்கியத்துக்கு நன்மை ஏற்படும்.

10 பிரியாணி இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பை மூட்டி பத்த வைக்க வேண்டும். பதினைந்து நிமிடங்களுக்கு அந்த பாத்திரத்தை அந்த அறையின் உள்ளே வைத்துவிடவேண்டும். இந்த இலை எரியும்போது அதன் நறுமணமும், புகையும் அந்த அறை முழுவதும் பரவிவிடும். பின்பு நாம் அந்த அறைக்குள் சென்று தூங்கும்போது அந்த நறுமணம் கலந்த வாசனை சுவாசிக்கும்போது நம் மனம் அழுத்தமானது குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தினமும் வீட்டில் இரண்டு பிரியாணி இலைகளை எரித்து வந்தால் அதிலிருந்து வெளிப்படும் புகை காற்றில் கலந்திருக்கும் மாசுக்களை நீக்க வழி வகை செய்யும். பிரியாணி இலையை எரிக்கும்போது அதன் வாசனை மூளையில் உள்ள நரம்புகள் தளர்வடையச் செய்யும். தேவையற்ற பதட்டத்தை நீக்கவும் துணைபுரியும். மூக்கு தொண்டையில் ஏற்படும் உடல் வீக்கத்தை நீக்கி நிவாரணம் தரும்.

பிரியாணி இலை ஒன்றை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதை பற்ற வைத்து எரிக்கும் போது அதன் வாசனையை நுகர்ந்தால் போதும் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பலவகையான ரசாயனங்கள்மற்றும் வாசனை திரவியங்களை உள்ளடங்கிய ஏர் பிரஷர் களை பயன்படுத்துவதற்கு பதில் பிரியாணி இலைகளை பயன்படுத்தலாம். அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. டெங்கு, காலரா போன்றவை வரும் காலத்தில் இந்த பிரியாணி இலைகள் நமக்கு நிவாரணம் தரும். வீட்டில் தினமும் இரண்டு மூன்று இலைகளை எரித்தாலே போதும் வீடு முழுவதும் நறுமணப் புகை வெளியேறி நமக்கு மனதில் அமைதியை கொடுக்கும்.

இந்த மன அமைதியைக் கொடுத்தது ஒரு பக்கமிருக்க அக்காலத்தில் முன்னோர்கள் அதற்கென்று ஒரு தாந்திரீக முறையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

அது என்னவென்றால், அதாவது ஒரு பிரியாணி இலையை எடுத்துக்கொண்டு அந்த பிரியாணியை மீது நாம் நம் மனதில் வேண்டிக்கொண்டு அதை அந்த இலையில் எழுத வேண்டும். பின்பு அந்த இலையை நாம் முழுமையாக எரித்துவிட வேண்டும்.அப்படியே எரித்து விட்டால் நம் மனதில் நினைத்ததை. அது நிச்சயம் நடக்கும் என்று கூறுவார்கள். மேலும் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதுவும் எல்லாம் விலகிவிடும்.நாம் ஒரு நியாயமான ஆசையே நினைத்துக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்தால் நினைத்ததை நிறைவேற்றும். உங்களுக்கு இதன் மேல் நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள்.

எனவே பிரியாணி இலைகளை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாதீர்கள். நம் மனதிலிருக்கும் டென்ஷனை போக்கும் இது பயன்படும்




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive