வருமான வரி கட்டுபவர்கள் இன் கவனத்திற்கு..
அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை குறித்து வருமான வரிக்கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் ரூ.2௦,௦௦௦க்கு மேல் வரும் ஓட்டல் பில், வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வரும் மின்கட்டணம், ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கும் நகை போன்ற சிலவற்றை வருமான வரித்துறை கணிக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதனால் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் உயர் மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகளை குறித்து வருமான வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, " அதிக மதிப்பினாலான பணப்பரிவர்த்தனைகள் கட்டயாம் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான வருமான வரிப்படிவத்திலும் மாற்றங்கள் செய்யவில்லை. சிலர் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ளதாக கணக்கு காண்பித்து கணக்கு தாக்கல் செய்யாமல் ஏமாற்றுகின்றனர்.
இவர்களை கண்டுப்பிடிக்க இது போன்ற அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்வோரது விவரங்கள் உதவுகிறது. அதிக பணப்பரிவர்த்தனை விவரங்களில் வணிக வகுப்பில் விமானத்தில் பயணம் செய்பவர்கள், வெளிநாடு செல்வோர், சொகுசு ஹோட்டலில் தங்குவோர் என பலரின் விவரங்கள் அடங்கும். இதில் சிலர் தானாக முன்வந்து கணக்கு தாக்கல் செய்கின்றனர். இருப்பினும் மூன்றாம் நபர்கள், நிறுவனத்தின் தகவல்கள் வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறிய உதவுகிறது" என கூறியுள்ளார்