இறுதித்தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்
கல்லூரி இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது என்று உச்சநீமன்றத்தில் யூஜிசி வாதிட்டுள்ளது.
செப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு இன்று தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
யூஜிசியின் உத்தரவுகளை மீறி கல்லூரித் தேர்வுகளை மாநில அரசுகள் தேர்வை ரத்து முடியாது என்றும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில அரசுகளின் கல்லூரி தேர்வு ரத்து அறிவிப்புகள் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாக யூஜிசி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க யூஜிசிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது