இனி இவையெல்லாம் கவனிக்கப்படும்'' - வருமான வரித்துறையின் புதிய திட்டம்!!
வரி விதிப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி ரூ. 20,000 க்கு மேல் ஹோட்டல் பில், ரூ. 1 லட்சத்துக்கு மேல் நகைகள் வாங்குதல், 1 லட்சத்துக்கு மேல் மின்சார கட்டணம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையின் கண்காணிப்பில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் உள்நாட்டு விமான பயணம், வெளிநாட்டு பயணம், பள்ளி - கல்லூரி கட்டணம் ஆகியவற்றுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்துபவர்களையும் வருமான வரித்துறையின் கண்காணி ப்பில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது