தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம்: தகவல் திரட்டுகிறது மத்திய அரசு

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம்: தகவல் திரட்டுகிறது மத்திய அரசு
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வகுப்பறை எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், 'யூ~டைஸ்' படிவத்தில் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில பள்ளிக்கல்வி தகவல்கள், சேகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்படுகின்றன.

மாவட்ட வாரியாக, 'யூ~டைஸ்' எனும், மாவட்ட கல்வி தகவல் தொகுப்பு படிவத்தின் மூலம், ஆண்டுதோறும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும், கட்டமைப்பு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர், மாணவர்கள் விகிதம், அலுவலக பணியாளர்கள் எண்ணிக்கை என, பல்வேறு தலைப்புகளின் கீழ், கிட்டத்தட்ட, 150க்கும் மேற்பட்ட கேள்விகள், இப்படிவத்தில் இடம்பெற்றுள்ளன.

அரசுப்பள்ளிகளுக்கு கல்விசார் நிதி, இத்தகவல் அடிப்படையில் ஒதுக்கப்படும்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எமிஸ் எண் உள்ளது.

இத்தகவல்களை, யூ~டைஸ் படிவத்தில் இணைத்து, அனைத்து வகை தகவல்களையும் புதுப்பிப்பது வழக்கம். இப்படிவத்தை, ஆசிரியர் பயிற்றுநர்கள் சரிபார்த்த பிறகு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு, இணையதளத்தில் பதிவேற்றுவர்' என்றனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive