உயர்கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 26.08.2020 - கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.அரசாணை டி) எண். 125 நாள்: 26.08.2020.
Go No :125 Date :26.08.2020 No Semester Exam Download
1. அரசாணை டி) எண்.94, உயர்கல்வித் (கே2) துறை, நாள் 04.07.2020.
2. அரசாணை டி) எண். 111, உயர்கல்வித் (கே2) துறை, நாள் 27.07.2020.
3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள் 26.08.2020.
கொரோனா நோய் தொற்று காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிமுறைகளின்படி, பருவத் தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை வகுப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஒன்றினை அமைத்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டன.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்பட்டன:
“கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த பருவத்திற்கு மட்டும் பல்கலைக்கழக நிதி குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அளித்துள்ள
வழிகாட்டுதலின்படி கீழ்க்கண்ட மாணாக்கர்கள் தேர்வு எழுவதிலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டிற்குச் செல்ல அரசு அனுமதி அளிக்கிறது.
* முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்கள்,
* முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்,
; * இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்
* முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்
* அதேபோன்று எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள்” அவ்வரசாணையில் மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது மாணாக்கர்களின் கோரிக்கையை எற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 26.08.2020 அன்று பின்வரும் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள் :-
“இறுதி பருவ தேர்வுகளைத் தவிர, பிற பருவ பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். '”
இறுதி பருவ தேர்வுகளைத் தவிர, பிற பருவ பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
5. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் உள்ள வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என அரசானையில் குறிப்பிடபட்டுள்ளது
0 Comments:
Post a Comment