PLUS TWO - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 PLUS TWO - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்த பின்பு,அவர்களின் தேர்வு மதிப்பெண்கள் சரியாக வந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும்,மறு

மதிப்பீட்டிற்கும்,விடைத்தாள் நகலை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விடைத்தாள் நகலை வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று பிற்பகல் முதல் https://www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு இயக்கங்கள் தெரிவித்துள்ளது.


விடைத்தாள் நகலை மேலே கொடுக்கப்பட்ட இணையத்தில் நோட்டிஃபிகேஷன் என்ற பட்டனை கிளிக் செய்து தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பதிவிறக்கம் செய்த விடைத்தாள் நகலை,மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள், அதே இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அந்த படிவத்தை இரண்டு நகல்கள் எடுத்து வரும் 21ஆம் தேதி முதல் 25ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive