TNPSC - பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகே டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும் உயர் அதிகாரி தகவல்!
பள்ளி, கல்லூரிகள் திறக்கப் பட்ட பின்னரே அரசு பணிகளுக் கான போட்டித் தேர்வுகள் நடத்தப் படும் என டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2020-ம் ஆண்டுக்கான டிஎன் பிஎஸ்சியின் தேர்வுக்கால அட்ட வணையில் இடம்பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கரோனா ஊரடங்கால் இன்னும் நடத்தப்பட வில்லை. ஏற்கெனவே நடத்தப் பட்ட தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
2020 வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறி விப்புகள் கடந்த மே மாதத்திலும், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை செயல் அலுவலர் பணி யிடங்களுக்கான தேர்வு அறிவிப் புகள் ஜூலையிலும் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். எனவே டிஎன்பிஎஸ்சியின் தேர்வுகால அட்டவணையை எதிர்பார்த்து பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
பள்ளி, கல்லூரிகள் திறந்தால் தான் தேர்வுகளை நடத்த முடியும். கரோனா காரணமாக, இந்த ஆண்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50 சதவீதம் தான் நிரப்ப முடியும். நடத்த இய லாத தேர்வுகள் அடுத்த ஆண்டு தேர்வுக்கால அட்டவணையில் சேர்க்கப்பட்டு நடத்தப்படும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வின் வெளிப் படைத் தன்மையை மேலும் அதி கரிக்கும் பொருட்டும், தேர்வர் களுக்கு கூடுதல் சேவைகள் வழங் கும் வகையிலும் தேர்வாணையத் துக்கு புதிய இணையதளம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பழைய தேர்வுகளின் கேள்வித்தாள்களும் இணையதளத்தில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment