பிளஸ் 1 மறுகூட்டல் நாளை ‛ரிசல்ட்' வெளியீடு.
பிளஸ் 1 மாணவர்களுக்கான மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை முடிவு வெளியிடப்படும்.மதிப்பெண் மாறியுள்ளவர்களின் பதிவெண் அடங்கிய பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நாளை பகல் வெளியாகும். பதிவெண் இல்லாதவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை. திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.