தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் படி வழிமுறைகளை பின்பற்றி பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில், நாளை 11ஆம் வகுப்பு தேர்வு துவங்குகிறது.
ஈரோட்டில் துணை தேர்வுக்காக 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதில், புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்கு 6 மையங்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வருபவர்களுக்கு இரண்டு மையங்கள் மொத்தம் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. இது போல எட்டாம் வகுப்பு தனித்தேர்வும், நாளை துவங்க உள்ளது. இந்தத் தேர்வு வரும் 7ஆம் தேதி நிறைவு பெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment