எம்.பில்., மாணவர் சேர்க்கை அக்., 20ம் தேதி வரை நீட்டிப்பு


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., மாணவர் சேர்க்கை வரும் அக்., 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020-21ம் ஆண்டிற்கான எம்.பில்., படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பிற்கான சேர்க்கை வரும் அக்., 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலக்கியவியல், மொழியியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், போன்ற பாடப்பிரிவுகளில் எம்.பில்., பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் 50 சதவீதம் பெற்றால் போதுமானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை, முதுகலை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள், சாதி மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் இணைத்தல் வேண்டும்.

மேலும், பதிவாளர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். என்ற முகவரிக்கு ரூ.300க்கான வரைவோலை இணைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.150 க்கான வரைவோலை எடுத்தால் போதுமானது.

மேற்கூறிய அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பங்களை இயக்குனர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, லாஸ்பேட்டை, புதுச்சேரி-605 008 என்ற முகவரிக்கு வரும் அக்.20ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரம் வேண்டு வோர், 0413-2255827 என்ற தொலைபேசி எண் அல்லது pile.py@gov.in என்ற மின்அஞ்சலில் தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive