அமைச்சுப்பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிவரன்முறை தொடர்பான இயக்குநர் செயல்முறை
அமைச்சுப்பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதிவாய்ந்த பணியளர்களுக்கு 2011 -12,2012-13,மற்றும் 2013-14 ம் ஆண்டுகளில் பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டது .அவ்வாறு பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு தமிழ் நாடு மேல்நிலைக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இதுநாள் தேதிவரை பணிவரன் முறை செய்யப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்சமயம் தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணிசிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளபட்டுள்ளதால் மேற்காண் 2011 -12,2012-13,மற்றும் 2013-14 ம் ஆண்டுகளில் பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் பதவியில் பணிவரன் முறை செய்வது தொடர்பாக உரிய ஆணங்களுடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வி இணை இயக்குநர் (மேல்நிலைகல்வி )உத்தரவிட்டுள்ளார்
0 Comments:
Post a Comment