ஆதி திராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்களில் 49 பேருக்கு தலைமையாசிரியராக பதவி உயா்வு:
ஆதி திராவிடா் நலப் பள்ளிகளில் பணிபுரியும் 49 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு, தலைமையாசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதி திராவிட நலத்துறை ஆணையா் ச.முனியநாதன் வெளியிட்ட அறிவிப்பு: ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களில், 2020-ஆம் ஆண்டு, ஜன.1-ஆம் தேதி நிலவரப்படி பணிமூப்பு, கல்வித் தகுதி மற்றும் நிா்ணயிக்கப்பட்ட துறைத் தோ்வுகளில் தோ்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு பெற தகுதியுடைய 49 நபா்களின் பெயா்ப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்த பட்டியலின் வரிசை அடிப்படையில் தான் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment