நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழை

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.வாழைப்பழமானது ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே.ஆனால் ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திருக்கும் ஒவ்வொரு வகை பலன் உண்டு.

அதிலும் செவ்வாழைப்பழத்தில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய அதீத சக்திகள் உண்டு.நாம் தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்!

ஒரு செவ்வாழையில்,உயிர்ச்சத்து,
சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்துக்கள், என பல மருத்துவ குணங்கள் நிறைந்த சத்துக்கள் உள்ளன.

செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

தற்போதைய சூழலில் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.குழந்தை இல்லாத திருமணமான தம்பதிகள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டுவிட்டு,அதனுடன் அரை டீஸ்பூன் தேனை குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வருகையில்,குழந்தை பாக்கியம் கிட்டும் என்று மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.

செவ்வாழையை தொடர்ந்து ஏழு நாட்கள் நாம் சாப்பிட்டு வருகையில்,வரட்டு சரும பிரச்சனை,சரும வெடிப்பு, மற்றும் சொறி சிரங்கு பிரச்சனைகள் தீரும்.

பொதுவாக நரம்பு தளர்ச்சி காரணமாக ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.தினமும் இரண்டு வேளை செவ்வாழை பழத்தை இந்தப் பிரச்சினை உள்ள ஆண்கள் சாப்பிட்டு வருகையில்,நரம்பு தளர்ச்சி சரியாகி ஆண்மை குறைவில் இருந்து உங்களை மீட்டெடுக்கும்.

மேலும் எந்த வயதினராக இருந்தாலும் இந்த செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்கள்,இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வருகையில் எந்தவிதமான கண் பிரச்சினைகளாக இருந்தாலும் விரட்டியடிக்கும். கண் பார்வையை மேம்படுத்தும்.முக்கியமாக மாலைக்கண் நோய்க்கு மிக மிக நல்ல மருந்தாக செவ்வாழைப்பழம் பயன்படுகின்றது.

வாரத்தில் ஒரு முறை நாம் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள தொற்றுநோய் கிருமிகளை முற்றிலும் அழிக்கும்.இதனால் உங்கள் உடலை பல பிரச்சினையிலிருந்து காப்பாற்றும்.இது மட்டுமின்றி மலச்சிக்கள்,
அஜீரணக்கோளாறு, மூலநோய், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இந்த செவ்வாழைப்பழம் பயன்படுகின்றது.

சிறுநீரக கோளாறு மற்றும் கல்லீரல் பிரச்சனைக்கு செவ்வாழைப்பழமானது நல்ல தீர்வாக அமைகின்றது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive