மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது!” - அமைச்சர் செங்கோட்டையன்

”மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது!” - அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும்எதிராக உள்ளதாக மு.க. ஸ்டாலின்குற்றச்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாகசட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியஅவர், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும்விரோதமாக உள்ளதாகக்குறிப்பிட்டார். 3, 5, 8 ஆம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுநடத்த புதிய கல்விக் கொள்கைவலியுறுத்துவதாகவும், இதுதமிழகத்தில் சிறப்பாக உள்ள நமதுகல்வி முறைக்கு எதிரானது என்றும்அவர் கூறினார். மேலும், உயர்கல்விஆணையத்தை அமைப்பதன் மூலம், மத்திய அரசு, மாநில அரசின்அதிகாரங்களை பறிக்கமுயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எனவே, புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசுமுழுமையாக எதிர்க்க வேண்டும்என்று மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தினார்.

இது குறித்து விளக்கம் அளித்தபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன், வரைவுஅறிக்கையின் மீதான தமிழகஅரசின் கருத்துக்கள் கடந்த ஆண்டுமத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.அதில் தமிழகத்தில்மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்புதெரிவித்தும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே இருக்கும்என தெளிவாக சொல்லப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு இடையேஇருக்கும் மொழி ஆங்கிலம் தான்இருந்து வருகிறது. புதியகல்விக்கொள்கையை முழுமையாகபரிசீலனை செய்யபள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் குழுஅமைக்கப்பட்டுள்ளது

அந்த குழு அறிக்கை தாக்கல் செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும்என்று பேசினார்.மேலும் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்புஉண்டாக்கினால் புதியகல்விக்கொள்கையை அனுமதிக்கமாட்டோம் என்றும் மத்திய அரசுஎவ்வளவு வலியுறுத்தினாலும் சிலகொள்கை முடிவுகளில் தமிழக அரசுஒருபோதும் பின்வாங்காது  3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகிடையாது என்பதில் ஒரு போதும்பின்வாங்கப்போவதில்லை எனஅமைச்சர் செங்கோட்டையன்விளக்கமளித்தார்.

















0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive