பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக அறிக்கை வருவதும், அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதை மாற்றிச் சொல்வதும், பிறகு அதற்கு மாற்றாக பள்ளிக் கல்வித்துறை அறிக்கை விடுவதும் இந்த கொரோனோ காலத்தில் தொடர்கதையான ஒன்று. அவ்வப்போது மாறிமாறி அறிக்கைகள் வருவதும், அதை ரத்து செய்வதும், மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தற்போதைய அறிவிப்பு குறித்து திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ விமர்சனம் செய்துள்ளார்.
தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், அக்டோபர் 1ம் தேதி 10, 11, & 12ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும் என்று சொல்கிறீர்கள். ஆனால், கூடவே ஆன்லைனில் பாடம் நடத்துவோம் என்கிறீர்கள். ’பாடங்களைச் சொல்லித்தருவதற்கு இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கிறோம்’ எனச் சொல்கிறீர்கள். அப்படியா என்று கேட்பதற்குள், மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம் என ஒரு ‘குண்டைப்’ போடுகிறீர்கள் என்பதாக தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment