SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கிவெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதைமட்டும் செய்யாதீர்கள்!
SBI வங்கி தனதுவாடிக்கையாளர்களுக்கு புதியஎச்சரிக்கை செய்தியைவெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும்ஆன்லைன் வங்கி மோசடிகளில்வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும், மோசக்காரர்கள்உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றமுற்படுவார்கள் என்றும் ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா விளக்கியுள்ளது. குறிப்பாக இதை மட்டும் செய்யாதீர்கள்என்று SBI ஒரு காரணத்தையும்குறிப்பிட்டுள்ளது. அதிகரிக்கும்ஆன்லைன் வங்கி மோசடி இன்றையகாலகட்டத்தில் ஆன்லைன் வங்கிமோசடிகள் பெரும்பாலும்ஸ்மார்ட்போன் வைத்துள்ளபயனர்களைக் குறிவைத்தேநிகழ்கிறது. அதிலும் குறிப்பாக SMS, வாய்ஸ் கால் அழைப்பு, ஈமெயில்மற்றும் வாட்ஸ்அப் போன்ற வழிகளில்தான் தற்போதைய மோசடிகள்பெரும்பாலும் நடக்கிறது. நீங்கள்செய்யும் ஒரு சிறிய வாட்ஸ்அப் தவறுமோசடி செய்பவர்களுக்கு உங்கள்வங்கிக் கணக்கை அப்படியேஅம்பலப்படுத்திவிடும் என்று SBI எச்சரித்துள்ளது.
உங்கள் வங்கி கணக்கை வேட்டையாடமுயற்சி சைபர் கிரைம் குற்றவாளிகள்மற்றும் நிதி மோசடி செய்பவர்கள்என்று பல மோசடி கும்பல்கள் உங்கள்வங்கி கணக்கை வேட்டையாடப்பொறிவைத்துக் காத்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன் மூலம் உங்களுக்குத்தெரியாமல் உங்கள் கணக்கைநொடியில் சூறையாடுவதே இவர்களின்நோக்கம். அதிகரித்து வரும்மோசடிகளைக் கருத்தில் கொண்டு, SBI வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக்கவனத்தில் கொண்டு சில எச்சரிக்கைநடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து SBI பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து SBI தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர்பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் அழைப்புகள் அல்லது SMS வந்தால் வாடிக்கையாளர்கள் மிகவும்கவனமாக இருக்குமாறு மக்களைக்கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாகஇந்த ஆன்லைன் மோசடிகள் எந்தவழியில் உங்களிடம் வரும் என்பதையும்SBI தெளிவாக விளக்கியுள்ளது.
அதுஎன்ன என்று இப்பொழுதுபார்க்கலாம். உங்களுடைய ஆசை தான்ஆபத்து முதலில் மோசடிக்காரர்களின்தாக்குதல் பெரும்பாலும் உங்களுக்குலாட்டரி அடித்துவிட்டது போலவும், அல்லது சில பரிசை நீங்கள் வென்றதுபோலவும் உங்களுடைய ஆசையைக்கிளப்பிவிடும் வடிவத்திலே இருக்கும். இந்த பரிசை நீங்கள் பெறுவதற்குஉங்கள் பெயரில் உள்ள வங்கிகணக்குத் தகவல், போன் நம்பர்போன்ற தகவல்களை கேட்பார்கள். வங்கி ஒருபோதும் 'இந்த' வழியில்உங்களை அணுகாது இந்த செய்திகள்எப்போதும் போலியானவை என்பதைநன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இவற்றை முற்றிலுமாக புறக்கணிப்பதுஉங்களுக்கு நல்லது.
SBI வெளியிட்டுள்ள தகவலின்படி, உங்கள் மொபைல் எண் மூலம் SMS, அழைப்பு, மின்னஞ்சல் அல்லதுவாட்ஸ்அப் போன்ற தளங்களின்வழியாக வங்கி ஒருபோதும் உங்கள்கணக்கு விபரங்களைப் பற்றியதனிப்பட்ட தகவல்களை கேட்காதுஎன்று உறுதிப்படத் தெரிவித்துள்ளது. OTP விபரங்கள் வங்கிக்கு தேவையா? அல்லது மோசடிக்காரர்களுக்குதேவையா? மோசடி செய்பவர்களின்முக்கிய நோக்கமே உங்களுக்குஆசைகாட்டி உங்கள் கணக்கை காலிசெய்வது தான் என்பதை மனதில்வைத்துக்கொள்ளுங்கள். ஆகையால்வீணாய் ஆசைப்பட்டு உங்களிடம்உள்ளதை இழக்காதீர்கள். எப்பொழுதுOTP எண்களை யாரிடமும், எந்தசூழ்நிலையிலும்பகிர்ந்துகொள்ளாதீர்கள். வங்கிஉங்களுடைய OTP விபரங்களைஒருபோதும் கேட்காது. ஆனால், மோசடிக்காரர்களுக்கு உங்கள்பணத்தை திருட இது மிகவும் முக்கியம்.
SBI வங்கி பாணியில் போலிமின்னஞ்சல்.. உஷார் மக்களே! சமீபத்தில் SBI வங்கியின்வாடிக்கையாளர்களுக்குப் போலிமின்னஞ்சல்கள் அதிகமாக வருவதாகஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனதுட்வீட்டில் தெரிவித்திருந்தது, குறிப்பாகவாடிக்கையாளர்களுக்கு வரும்மின்னஞ்சல்களின் பாணிஉண்மையான SBI வங்கியின்மின்னஞ்சல் போலவே இருக்கிறதுஎன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எளிதில்ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுதெரியவந்துள்ளது. SBI வங்கிவெளியிட்ட எச்சரிக்கை செய்திஇதுபோன்ற போன்ற போலிமின்னஞ்சல்களை வாடிக்கையாளர்கள்கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்என்று SBI வங்கி எச்சரித்துள்ளது. வங்கி சார்பாக இதுபோன்ற எந்தமின்னஞ்சலும்வாடிக்கையாளர்களுக்குஅனுப்பப்படவில்லை என்றும் SBI வங்கிதெரிவித்துள்ளது. இதுகுறித்ததகவலையும் வங்கி தனது ட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மோசடியிலிருந்து தப்ப இந்தவிஷயங்களை மனதில் கொள்ளுங்கள்என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதைமட்டும் ஒருபோதும் கிளிக்செய்யாதீர்கள் முதலில் எப்போதும், யாருடன் உங்களின் தனிப்பட்ட வங்கிவிவரங்களை பகிர்ந்துகொள்ளவேண்டாம். உங்கள் ஆன்லைன்பேங்கிங் கணக்கு கடவுச்சொல்லைஅடிக்கடி தொடர்ந்து மாற்றம்செய்யுங்கள். தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது SMS மூலம்உங்கள் இணைய வங்கி விவரங்களையாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முக்கியமாக எந்த லிங்க்-களையும்ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்என்று வங்கி எச்சரித்துள்ளது. SBI கிளையை அணுகுங்கள் அதேபோல், எப்பொழுதும் வங்கி தொடர்பானதகவல்களுக்கு SBI வங்கியின்அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மட்டும்பயன்படுத்துங்கள்.
உங்களுக்கு மோசடி குறித்து ஏதேனும்சந்தேகம் எழுந்தால் அருகில் உள்ள SBI கிளையை அணுகுங்கள். மனதில்இதை பதிய வையுங்கள் சைபர்குற்றவாளிகளிடம் இருந்து தப்பிக்கப்போலி லிங்க்-ஐ மட்டும் கிளிக்செய்யாதீர்கள். இதுபோன்றபாதுகாப்பான செய்தியை மக்களுடன்பகிர்ந்துகொள்ளுங்கள் என்று SBI கூறியுள்ளது. இனியும் ஆன்லைன்மோசடியில் சிக்கி உங்களுடையபணத்தை வீணாய் இழக்காதீர்கள். எப்பொழுதும் உஷாராக இருங்கள். குறிப்பாக வங்கி எப்பொழுதும்உங்களை போனில்தொடர்புகொள்ளாது என்பதை மனதில்பதியவைத்துக்கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment