எவ்வளவு முயற்சி செய்தாலும் நகம் கடிப்பதை விட முடியாதததற்கு இவை தான் காரணம்!!!

எவ்வளவு முயற்சி செய்தாலும் நகம் கடிப்பதை விட முடியாதததற்கு இவை தான் காரணம்!!!

நம்மில் பெரும்பாலானோருக்கு நகங்களை கடித்து துப்பும் ஒரு பழக்கம் உண்டு. அது கெட்டப் பழக்கம் என தெரிந்த பின்னரும் அதனை எப்படி விடுவது என தெரியாமல் குழப்பத்தில் இருப்போருக்கு தான் இந்த பதிவு. நகம் கடிப்பதால் கையில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸூகள் வாய்வழியாக உடலுக்குள் சென்று பல தீங்கினை விளைவிக்கும். இந்த பழக்கத்தை லேசாக ஏன் விட முடியவில்லை என்பதற்கு குறிப்பிட்ட ஐந்து  காரணங்கள் உள்ளன. அவற்றை இப்போது காண்போம். 

★அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பர். எந்த ஒரு விஷயத்திலும் முழுமையாக இருக்க வேண்டும், அந்த விஷயத்தை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நகம் கடிப்பார்கள். இது அமெரிக்காவில் நடைப்பெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 

★ஒரு சில நேரங்களில் நகம் கடிப்பது என்பது வெறித்தனமான கட்டாய கோளாறாகவும் இருக்கலாம். இதனை ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் ஆதரித்தாலும், ஒரு சிலர் இதனை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். அதற்கு மாறாக இப்பழக்கம் உந்து விசை காரணமாக உண்டாகிறது என்பது அவர்களின் கருத்து.

★மனதில் அதிகப்படியான கவலை காரணமாக மனநல பிரச்சனை உள்ளவர்கள் நகம் கடிக்கும் நபர்களாக இருப்பர். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 80% நபர்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பது ஈரானிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

★விரக்தி என்ற உணர்வு அதிகமாகும் போது நகங்களை கடிப்பது ஒரு சிலரது வழக்கம். இது ஒரு ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சரியாக சொன்னால் மன அழுத்தம் அல்லது விரக்தி ஆகிய இரண்டும் இந்த கெட்டப்பழக்கத்திற்கு வழிவகுக்கும். 

★மனநல வளர்ச்சியில் ஏதேனும் கோளாறு இருப்பதால் கூட நகம் கடிக்கும் பழக்கம் உருவாகலாம் என்பது ஆஸ்திரேலிய நரம்பியல் நிபுணர் ஒருவரின் கருந்தாகும். இதன் விளைவாக நகம் கடித்தல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive