அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21-ம் தேதி முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து, பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. அக்கடிதத்தில், 42 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம் அதன் பெயர், புகழ் உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமைகளை அரசு திருட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ற வகையில் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அண்ணா பல்கலைகழக பேராசிரியர் சங்கம், பெயரை மாற்றும் சட்ட மசோதாவை திருத்தியமைக்க அரசுக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment