தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான... தர வரிசைப் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான... தர வரிசைப் பட்டியல் வெளியீடு!!

 

சென்னை: தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முன்னரே உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்கள் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 523க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் வழங்கப்படும் இடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணபித்து இருந்தனர்.

இதற்கான, சமவாய்ப்பு எண், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு இருந்தனர்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்து இருந்தார். ஆனால், அன்று வெளியாகவில்லை. இன்று (செப்டம்பர் 28ஆம் தேதி) மாலை வெளியாகும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இருக்கும் 458 கல்லூரிகளில் 1,61,877 இடங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. 11.1லட்சம் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர்.

source: oneindia.com





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive