மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் பல்வேறு திருத்தங்கள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் வாகனங்களில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதற்கு விதிகப்பட்ட தடை விலக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
காருக்குள் இருக்கும்போது தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க காரணங்களில் ஒன்று, சட்ட அமலாக்கப் பணியாளர்களால் நிறுத்தப்பட்டால் ஆவணங்களைக் காண்பிப்பதாகும். அதாவது, நேரடியாக ஆவணங்களை வழங்குவதற்கு பதிலாக மின்னணு வழிமுறைகள் மூலம் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களைக் காண்பிக்கலாம்.
டிஜிலாக்கரில் முறையாக சரிபார்க்கப்பட்ட இதுபோன்ற ஆவணங்கள் சட்ட அமலாக்க பணியாளர்கள் சரிபார்க்க போதுமானதாகும். இது ஓட்டுநர்களுக்கும் பணியாளர்களுக்கு வசதியான அம்சமாக உள்ளது. நிச்சயமாக, இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு டிஜி லாக்கர் மற்றும் / அல்லது எம்-பரிவாஹான் போன்ற அரசாங்க இணையதளங்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும், மேலும் அவை முன்கூட்டியே சரிபார்க்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஆய்வுக்கு நேரடியாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டால் அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்ட அமலாக்கப் பணியாளர்கள் சரிபார்க்க விவரங்கள் ஒரு போர்ட்டலில் கிடைக்கும். கார் ஆவணங்கள் தொடர்பான அனைத்து ஒத்த தரவுகளும் மின்னணு முறையில் சேமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
மிக முக்கியமாக தேவைப்பட்டால், வழிசெலுத்தல் நோக்கங்களுக்காக மட்டும் டிரைவர்கள் மொபைலைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விதிகள் தெளிவுபடுத்துகின்றன. அத்தகைய சாதனத்தை வைத்திருப்பது அவருக்கு, அவளுக்கு அல்லது பிற பயணிகள் / ஓட்டுநர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய காரில் இருப்பவர்களே பொறுப்பாவார்கள்.
இந்த விதிமுறைகள் மோட்டார் வாகனங்கள் (ஓட்டுநர்) விதிமுறைகள் 2017 (Motor Vehicles (Driving) Regulations 2017) இன் திருத்தங்களின் ஒரு பகுதியாக வந்துள்ளன.
0 Comments:
Post a Comment