
அரியர் மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது. இதனையடுத்து அரியர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கமளித்துள்ளார். அதாவது, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கு விசாரணை முடிந்தபின் அறிவிக்கப்படும் தீர்ப்பின் படியே அரியர் மாணவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், யூ.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதகல்களின் படியே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். மேலும் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் தன்னுடைய பர்சனல் மெயில் ஐடி மூலமாக ஏ.ஐ.சி.டி.இ.-க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இதனால் மாணவர்கள் இதுகுறித்து கவலையடைய வேண்டாம் எனவும், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வினை எழுதவே தயாராக இல்லை என்றுதான் அர்த்தம் என்ற ஒரு விளக்கத்தையும் சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த செய்தி அரியர் மாணவர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment