கடந்த ஒரு வார காலமாக இறங்கு முகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது.
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.
இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது
கடந்த வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த தங்கம் விலை, ரூ.1000க்கும் அதிகமாக சரிந்திருந்தது. இதனால், இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த இரு தினங்களாக உயர்வுடன் காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.16அதிகரித்து ரூ.4,834-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.64,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment