நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு

நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு
கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ஒரு புறம் கொரோனா பரவல் இருந்தாலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பது பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில் டிசம்பர் மாதம் ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமோ அல்லது அதற்கு பிறகு திறக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுதேர்தலுக்கு பிறகு ஜூன், ஜூலை மாதத்தில் தேர்வினை நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் பொதுத்தேர்வினை நடத்துவதற்குரிய பணிகளை அரசு தேர்வுத்துறை 6 மாதங்களுக்கு முன்னதாக துவங்கும். அவ்வாறு துவங்கினால் மட்டுமே 10, 11, 12ஆகிய 3 வகுப்புகளுக்கும் சிக்கல் இல்லாமல் பொதுத் தேர்வினை நடத்த முடியும். ஆனால் தற்போது வரை அரசிடமிருந்து பொதுத்தேர்வுகள் சம்பந்தமான ஆரம்பகட்ட ஆலோசனைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் பொதுத்தேர்வினை சிக்கல் இல்லாமல் நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்வுத்துறை குழப்பத்தில் உள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் முறையான முடிவெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive