ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு
நமது வலைத்தளத்தை கிடைத்த தகவல் படி போலி ஆவணங்கள் தயாரித்து ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி கிறிஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் அன்சாரி ஆமினா ராஜாத்தி ஆகிய இருவரும் போலி ஆவணங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயார் செய்து இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் 2002ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்கள் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
பின்பு காவல் துறை இயக்குனர் உத்தரவின்படி சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது சிபிசிஐடி போலீசார் இருவரையும் கைது செய்தனர் இதுகுறித்து திருவையாறு குற்றவியல் நீதிமன்ற நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது வழக்கை விசாரித்து அன்சாரி மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி திருவையாறு குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீர்ப்பு வழங்கினார்
0 Comments:
Post a Comment