உத்தரகண்டில் நவ.2 முதல் பள்ளிகள் திறப்பு


உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

நவம்பர் 2 முதல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பள்ளிகள் திறந்தபின் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் தொற்று நோய்கள் சட்டம், 1897 இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என பள்ளி நிர்வாகத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மாநில கல்விச் செயலாளர் ஆர். மீனாட்சி சுந்த்ரம் கூறுகையில்,

பள்ளிகளுக்கு தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, அவற்றைப் பின்பற்றிய பிறகும், ஒரு ஆசிரியர் அல்லது மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் நிர்வாகத்தை குறை கூற முடியாது.

அனைத்து பள்ளிகளும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு யாராவது இணங்கவில்லை என்றால் மட்டுமே தொற்றுநோய்கள் சட்டம் பொருந்தும் என்று தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கு வருவதற்கு முன்பு மாணவர்கள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டியிருக்கும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்றால், அவர்களின் இணையவழிக் கல்வியை தொடரப்படும் என்றும் கல்விச் செயலாளர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive