
பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்கள்நலன் கருதி அந்த விபரங்களை வெளியிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment